INDvSA | டி20 உலகக் கோப்பை சாம்பியன் யார்... தென்னாப்பிரிக்காவோடு பலப்பரிட்சை நடத்தும் இந்தியா..!

முரட்டு ஃபார்மில் இருக்கும் இந்திய கேப்டன் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். அதுவும் 150+ ஸ்டிரைக் ரேட்டில் ரோஹித் அடித்து நொறுக்கிக்கொண்டிருக்கிறார்.
ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மாRamon Espinosa
Published on
ஃபைனல்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா
போட்டி நடக்கும் மைதானம்: கென்ஸிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸ்.
போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 29, இந்திய நேரப்படி இரவு 8 மணி

ஃபைனலுக்கு வந்த பாதை

இந்தியா
குரூப் சுற்று: போட்டிகள் - 4, வெற்றிகள் - 3, தோல்வி - 0, முடிவு இல்லை - 1
சூப்பர் 8 சுற்று: போட்டிகள் - 3, வெற்றிகள் - 3, தோல்வி - 0, முடிவு இல்லை - 0
அரையிறுதி: இங்கிலாந்துக்கு எதிராக 68 ரன்களில் வெற்றி
சிறந்த பேட்ஸ்மேன்: ரோஹித் ஷர்மா - 7 இன்னிங்ஸ்களில் 248 ரன்கள்
சிறந்த பௌலர்: ஆர்ஷ்தீப் சிங் - 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்

தென்னாப்பிரிக்கா
குரூப் சுற்று: போட்டிகள் - 4, வெற்றிகள் - 4, தோல்வி - 0, முடிவு இல்லை - 0
சூப்பர் 8 சுற்று: போட்டிகள் - 3, வெற்றிகள் - 3, தோல்வி - 0, முடிவு இல்லை - 0
அரையிறுதி: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 9 விக்கெட்டுகளில் வெற்றி
சிறந்த பேட்ஸ்மேன்: குவின்டன் டி காக் - 8 போட்டிகளில் 204 ரன்கள்
சிறந்த பௌலர்: ஆன்ரிக் நார்கியா - 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகள்

11 ஆண்டுகள் கழித்து கோப்பை வெல்லுமா இந்தியா

2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு இந்திய அணி எந்த ஐசிசி தொடரையும் வெல்லவில்லை. தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் தோற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை கோப்பை வெல்லும் அனைத்து வாய்ப்புகளும் இந்திய அணிக்கு இருக்கின்றன. பேட்டிங், பௌலிங் என அனைத்துமே பக்காவே இருக்கிறது. ஒரேயொரு பிரச்சனை கோலியின் ஃபார்ம். அவர் 7 போட்டிகளில் 75 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். இருந்தாலும் அவரால் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் என்ன செய்ய முடியும் என்று நமக்குத் தெரியும். கேப்டன் ரோஹித் ஷர்மா கூட, "கோலி தன்னுடைய பெஸ்ட்டை ஃபைனலுக்காக வைத்திருக்கலாம்" என்று கூறினார். அது நடந்தால் நிச்சயம் இந்தியாவைத் தடுக்க முடியாது. இந்திய அணியும் ரசிகர்களும் அதற்காகக் காத்திருக்கும். பும்ரா, ஆர்ஷ்தீப், குல்தீப், அக்‌ஷர், ஹர்திக் அடங்கிய பௌலிங் யூனிட் தான் இந்திய அணியின் மிகப் பெரிய பலம். அது மீண்டும் ஒருமுறை கிளிக் ஆனால் இந்தியா இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை சாம்பியனாக மாறும்.

முதல் உலகக் கோப்பையை வெல்லுமா தென்னாப்பிரிக்கா?

காலம் காலமாக தென்னாப்பிரிக்க அணி எதிர்பார்த்திருந்த தருணம் இப்போது அவர்களுக்கு மிகவும் அருகில் வந்திருக்கிறது. ஒரு உலகக் கோப்பை ஃபைனலில் முதல் முறையாக விளையாடவிருக்கிறது அந்த அணி. அவர்கள் பௌலிங் பக்காவாக வேலை செய்ய, எதிரணி பேட்ஸ்மேன்களை வதம் செய்துகொண்டிருக்கிறது அந்த அணி. பேட்டிங் கொஞ்சம் சுமாராகவே இருந்தாலும், பந்துவீச்சை வைத்து சமாளித்துக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை அவர்கள் வென்ற விதம் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். அந்தப் போட்டியில் ஹெண்ட்ரிக்ஸ், மார்க்ரம் இருவருக்குமே பேட்டிங்கில் சில ரன்கள் எடுக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் நல்ல விஷயம். முதல் கோப்பை மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் அவர்கள் நிச்சயம் நெருக்கையை சந்திப்பார்கள். அதை சமாளித்தால், ரோஹித்தையும், பும்ராவையும் சமாளித்தால் கோப்பை கனவு கைகூடலாம்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்

ரோஹித் ஷர்மா
"டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் ஸ்பெஷலான ஒன்று" - பயிற்சியாளர் அமோல் மஜோம்தார்

இந்தியா: ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே, ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஆர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா.

தென்னாப்பிரிக்கா: குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம், எய்ன்ரிக் கிளாசன், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ யான்சன், தப்ராய்ஸ் ஷம்ஸி, ககிஸோ ரபாடா, கேஷவ் மஹாராஜ், ஆன்ரிக் நார்கியா.

கவனிக்கவேண்டிய வீரர்

இந்தியா - ரோஹித் ஷர்மா: முரட்டு ஃபார்மில் இருக்கும் இந்திய கேப்டன் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். அதுவும் 150+ ஸ்டிரைக் ரேட்டில் அடித்து நொறுக்கிக்கொண்டிருக்கிறார். பலமான தென்னாப்பிரிக்க பந்துவீச்சை பவர்பிளேவிலேயே பதம் பார்த்தால் ஆட்டத்தை அங்கேயே இந்தியாவின் பக்கம் கொண்டுவரலாம்.

தென்னாப்பிரிக்கா - எய்ன்ரிக் கிளாசன்: எதிரணி பேட்ஸ்மேன்களை மொத்தமாக காலி செய்துகொண்டிருக்கும் இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் என்றால் அது நிச்சயம் கிளாசன் தான். இந்த உலகக் கோப்பையில் அவரிடமிருந்து இன்னும் பெரிய ஸ்கோர் வரவில்லை. கிளாசன் போன்ற வீரர்கள் ஃபைனல் போன்ற மிகப் பெரிய போட்டிகளில் தங்கள் விஸ்வரூபத்தைக் காட்டக்கூடும். அப்படி நடந்தால் அது இந்திய அணியைப் பெரிதாக பாதிக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com