IND vs SA: 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜோகனஸ்பெர்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் 8 ரன்களிலும் திலக் வர்மா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த யஷ்ஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

suryakumar
suryakumarpt desk

ஜெய்ஸ்வால் 60 ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமார் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ind vs sa
சர்வதேச டி20 வரலாற்றில் அதிக சதங்கள்! ஒரே போட்டியில் 2 உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

அதிகபட்சமாக டேவிட் மில்லர் 35 ரன்களும், எய்டன் மார்க்ரம் 25 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் தொடரை ஒன்றுக்கு ஒன்று என இந்திய அணி சமன் செய்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை சூர்ய குமார் யாதவ் தட்டிச் சென்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com