மகளிர் ஆசியக் கோப்பை|பாகிஸ்தானை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி! பிறந்தநாள் பரிசை தவறவிட்ட மந்தனா!

ஆசியக் கோப்பைக்கு எதிரான தொடரில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி
இந்திய அணிஎக்ஸ் தளம்
Published on

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாள், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடும் 9வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஜூலை 19) இலங்கையில் தொடங்கியது.

இதன் முதல் போட்டியில் அதாவது ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸை நேபாள அணிகள் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. 2வது ஆட்டத்தில் அதே பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.

இதில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து குறைந்த ரன்களிலேயே பெவிலியன் திரும்பினர். என்றாலும், சித்ரா அமீன் (25 ரன்கள்), துபா ஹாசன் (22 ரன்கள்), ஃபாத்திமா சனா (22 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், அந்த அணி 19.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்களையும் ரேணுகா சிங் மற்றும் பூஜா வஸ்த்ராகர், ஸ்ரேயங்கா பாட்டில் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையும் படிக்க: இலங்கை டூர்| ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்படாதது ஏன்? பின்னணியில் இருந்தது யார்?

இந்திய அணி
2024 Women Asia Cup|UAE-க்கு எதிரானப் போட்டியில் முதல் வெற்றி.. வரலாற்றில் இடம்பிடித்த நேபாள் அணி!

பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஷபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் தொடக்கம் முதலே வாண வேடிக்கை காட்டினர். சமீபகாலமாக இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஜோடியே ஆட்டத்தை நிறைவு செய்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். காரணம், அந்த அளவுக்கு அவர்களுடைய ஆட்டம் இருந்தது. குறிப்பாக 8வது ஓவரில் ஸ்மிருதி மந்தனா துபா ஹாசன் ஓவரில் 5 பவுண்டரிகளைத் தெறிக்கவிட்டார்.

இதனால் விரைவிலேயே அரைசதம் அடித்து ரசிகர்களுக்கு பர்த்டே கிப்ஃட் (நேற்று பிறந்தாள்) தருவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், 31 பந்துகளில் 9 பவுண்டரிகள் உதவியுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்ந்தார்.

அதுபோல் மற்றொரு முனையில் அவருக்கு இணையாக சரவெடி வெடித்த ஷபாலியும் 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அதில் 6 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடக்கம்.

அடுத்துவந்த வீராங்கனைகள் வெற்றிக்கு வித்திடுவர் என நினைத்த நிலையில் ஹேமலதா, 11வது ஓவரில் நசரா சாந்து ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை தெறிக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். என்றாலும் அவரும் 14 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் கேப்டன் ஹர்மன் பிரித் ஹவுரும் (5 ரன்கள்), ஜெசிமா ரோட்ரிக்ஸும் (3 ரன்கள்) அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் இந்திய அணி 14.1 ஓவரில் 109 ரன்கள் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதையும் படிக்க: கர்நாடகாவில் நிகழ்ந்த அதிசயம்| கொலையாளியை பிடிக்க 8 கிமீ தூரம் ஓடி மற்றொரு கொலையை தடுத்த மோப்ப நாய்!

இந்திய அணி
நாளை தொடங்கும் 9வது மகளிர் ஆசிய கோப்பை.. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com