”ஹர்திக் பாண்டியாவிற்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை” - கடுமையாக விளாசிய இர்ஃபான் பதான்!

”ஹர்திக் பாண்டியாவிற்கு இவ்வளவு முன்னுரிமை கொடுப்பது ஏன்” என இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்ஃபான் பதான் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஹர்திக் பாண்டியா, இர்பான் பதான்
ஹர்திக் பாண்டியா, இர்பான் பதான்ட்விட்டர்
Published on

நடப்பு ஐபிஎல் சீசன் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. அதேநேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும்போது மட்டும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராகக் குரல்கள் விண்ணைப் பிளந்து வருகின்றன. அவர், மும்பை அணிக்கு தலைமை தாங்கியது முதலே ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். தவிர, நடப்புத் தொடரில் அவருடைய தலைமையில் மும்பை அணி சிறப்பாகவும் செயல்படவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாpt web

மேலும், அவரும் அணிக்குச் சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. இதனால், அடுத்து நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் அவரைச் சேர்ப்பது குறித்து பெரிய விவாதமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் வீரரான இர்பான் பதானும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராகவே கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 'ஜெய் ஸ்ரீராம்’ என எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள்.. மதிப்பெண் அளித்த 2 பேராசிரியர்கள் இடைநீக்கம்!

ஹர்திக் பாண்டியா, இர்பான் பதான்
ஹர்திக் பாண்டியா மீது தொடரும் விமர்சனங்கள். கேப்டனாகவும், ஆல்ரவுண்டராகவும் தொடரும் தடுமாற்றம்!

இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்திய கிரிக்கெட் வாரியம், அவரது விஷயத்தில் இதனை தெளிவுபடுத்த வேண்டும். இதுவரை அவருக்குக் கொடுத்ததுபோல் மேலும் அவருக்கு அதிக முன்னுரிமை கொடுக்கக் கூடாது. அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்று தன்னை நினைத்தால், சர்வதேச அளவில் அதுமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆல்ரவுண்டர் இடத்தைப் பொறுத்தவரை, அவர் சர்வதேச அளவில் அந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நாம் திறனைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். ஐ.பி.எல் போட்டிகளுக்கும் சர்வதேச ஆட்டங்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

முதலில், ஹர்திக் முழு ஆண்டு முழுவதும் விளையாட வேண்டும். அவரை தேர்ந்தெடுப்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுத்த வேண்டும். தனிநபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை நிறுத்தல் வேண்டும். ஆஸ்திரேலியா பல ஆண்டுகளாக செய்து வருவது என்னவென்றால், அவர்கள் உண்மையில் அணி விளையாட்டை விரும்புகிறார்கள். அனைவரையும் சூப்பர் ஸ்டார் ஆக்குகிறார்கள். ஒருவரை மட்டும் சூப்பர் ஸ்டார் ஆக்குவதில்லை, அணியில் உள்ள அனைவரும் சூப்பர் ஸ்டார்கள். அப்படிச் செய்யாவிட்டால் பெரிய போட்டிகளில் வெற்றிபெற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அசாம் | “பாஜகவுக்கு ஓட்டு போடாவிட்டால் புல்டோசர் வரும்” என மிரட்டிய வனத்துறை... மக்கள் புகார்!

ஹர்திக் பாண்டியா, இர்பான் பதான்
'ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கினால்..' இர்பான் பதான் கொடுத்த எச்சரிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com