’எத்தனை முறைதான் ஆஸ்திரேலியாவிடம் தோற்பது..’ - தோல்வி குறித்து மனமுடைந்து பேசிய ஹர்மன்ப்ரீத்!

அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டிய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்திய அணி.
ஹர்மன்ப்ரீத்
ஹர்மன்ப்ரீத்web
Published on

9-வது ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 3 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து முதலிய அணிகள் மற்றொரு பிரிவிலும் களமிறங்கி விளையாடி வருகின்றன.

நடப்பு 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடையும் நிலையில், இந்தியா இடம்பெற்றிருக்கும் பிரிவின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன.

இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணிஎக்ஸ் தளம்

இதில் ஏற்கெனவே இந்திய அணி, தன்னுடைய கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததை அடுத்து, அதன் அரையிறுதிக் கனவு வாழ்வா... சாவா என்ற நிலைக்கு சென்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்திருப்பதால் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தும்பட்சத்தில் இந்தியாவுக்கு அரையிறுதிக் கனவு நிறைவேறும். இல்லையெனில், நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிபெற்று இந்தியா தொடரைவிட்டு கட்டாயம் வெளியேறும்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு பிறகு, இறுதிவரை வெற்றிக்காக போராடிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேசுகையில் இந்தியாவில் அனைத்து வீரர்களின் பங்களிப்பும் வேண்டுமென்பதை உடைந்த மனதுடன் வெளிப்படுத்தினார்.

ஹர்மன்ப்ரீத்
இனி ரோகித்-ஹர்திக் பிரச்னை இருக்காது.. முடிவுக்குவரும் MI சர்ச்சைகள்! மீண்டும் ஜெயவர்தனே HEAD COACH!

எத்தனை முறைதான் ஆஸ்திரேலியாவிடம் தோற்பது..

ஹர்மன்ப்ரீத் கவுர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு போராடுவது இது முதல்முறையல்ல, 2022 ஒருநாள் உலகக் கோப்பையின் போதும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போதும், பின்னர் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை என 4 முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மனம் உடையும் தருணங்களை சந்தித்துள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

ஒவ்வொருமுறையும் தனியொரு ஆளாக போராடி, மற்றவீரர்களின் பங்களிப்பு இல்லாமல் கடைசி லைனை கடக்க முடியாமல் விரக்தியுடனே ஹர்மன்ப்ரீத் திரும்பியுள்ளார்.

ஹர்மன்ப்ரீத்
ஹர்மன்ப்ரீத்

இந்நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்விகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியா அணி ஒன்று அல்லது இரண்டு வீரர்களை சார்ந்த அணி அல்ல, அவர்கள் அணியில் அனைத்து வீரர்களும் பங்களிப்புடன் செயல்படுகிறார்கள். உடன் அவர்களுக்கு பங்களிக்கும் ஆல்-ரவுண்டர்கள் நிறையபேர் உள்ளனர். நாங்களும் நன்றாக திட்டமிட்டோம், இறுதிவரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். ஆனால் அவர்கள் எளிதாக ரன்களை கொடுக்கவில்லை. அவர்கள் ஒரு அனுபவம் வாய்ந்த அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

இதுஎதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று தான், ஆனால் போட்டியில் ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் தவறவிட்டாலும், அடுத்துவந்து அணிக்காக விளையாடக்கூடிய வீரர்களை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

ஹர்மன்ப்ரீத்
ஹர்மன்ப்ரீத்

மற்றொரு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும். ஆனால் இல்லையெனில், அங்கு இருக்க தகுதியானவர்கள் யாராக இருந்தாலும், அந்த அணி இருக்கும்” என்று விரக்தியுடன் மனமுடைந்து ஹர்மன்ப்ரீத் பேசினார்.

ஹர்மன்ப்ரீத்
மகளிர் டி20 உலகக்கோப்பை: மீண்டும் மீண்டும் ஆஸ்திரேலியா.. அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா தோல்வி!

போட்டியில் என்ன நடந்தது?

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் அனைத்து வீரர்களுமே தங்களுடைய பங்களிப்பை வழங்கிய நிலையில், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது.

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடங்கிய இந்திய அணியில் ஷபாலி வர்மா 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் சிறப்பாக தொடங்கினார். ஆனால் மறுமுனையில் 12 பந்துக்கு 6 ரன்கள் என தடுமாறிய ஸ்மிரிதி அழுத்தம் கூட்டினார். அழுத்தத்தில் அடித்துக்கொண்டிருந்த ஷபாலியும் அவுட்டாகி வெளியேற, அடுத்தடுத்து ஸ்மிரிதி மற்றும் ஜெமிமா இருவரும் அவுட்டாகி வெளியேறினர்.

kaur
kaur

4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ஹவுர் மற்றும் தீப்தி ஷர்மா இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட, இந்திய அணி வெற்றியின் பாதைக்கு திரும்பியது. ஆனால் முக்கியமான நேரத்தில் தீப்தி சர்மாவை வெளியேற்றிய ஆஸ்திரேலியா, அடுத்துவந்த ரிச்சா கோஸையும் ரன் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

கடைசி 4 ஓவருக்கு 41 ரன்கள் தேவை என்ற இடத்தில் 17 ஆவது ஓவரில் வெறும் ஒரு ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்த ஆஸ்திரேலியா அணி, இந்தியாவின் கைகளில் இருந்து போட்டியை தங்கள் பக்கம் இழுத்தது. பின்னர் ஒவ்வொரு ஓவருக்கும் 14 ரன்கள் தேவை என போட்டி மாற, இறுதி ஓவரில் 14 ரன்கள் அடிக்கும் முயற்சியில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 20 ஓவர் முடிவில் 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

kaur
kaur

54 ரன்களுடன் இறுதிவரை கேப்டன் ஹர்மன்ப்ரீத் களத்தில் போராடினாலும் இந்தியாவால் மற்றவீரர்களின் பங்களிப்பு இல்லாமல் வெற்றிபெற முடியவில்லை.

ஹர்மன்ப்ரீத்
மகளிர் டி20 உலகக்கோப்பை | இந்தியாவின் அரையிறுதிக் கனவு நிறைவேறுமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com