ஹர்திக் பாண்டியாவின் கடைசிநேர மிரட்டலால் இந்தியா ரன் குவிப்பு! குல்தீப் சுழலில் வீழ்ந்தது வங்கதேசம்!

வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் 196 ரன்களை குவித்தது இந்திய அணி. பின்னர் விளையாடிய வங்கதேச அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாcricinfo
Published on

நடப்பு 2024 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் முதலிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், எந்த 4 அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு செல்லும் என்ற முக்கியமான கட்டத்திற்கு தொடர் நகர்ந்துள்ளது.

குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என மூன்று அணிகளும் இன்னும் அரையிறுதி செல்வதற்கான ரேஸில் உயிர்ப்புடன் இருக்கும் நிலையில், குரூப் 1 பிரிவில் இருக்கும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று முக்கியமான போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

ஹர்திக் பாண்டியா
0 தோல்வி.. வரிசையாக 6 வெற்றி! இருப்பினும் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் SA! வில்லனாக மாறிய WI!

அதிரடியாக தொடங்கிய கோலி ரோகித்! முடித்து வைத்த ஹர்திக்!

டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் மற்றும் கோலி இருவரும் அடித்தால் சிக்சர் பவுண்டரி என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 பவுண்டரி 1 சிக்சர் என ரோகித் மிரட்டிவிட, 3 சிக்சர்கள் 1 பவுண்டரி என துவம்சம் செய்த விராட் கோலி கலக்கிப்போட்டார்.

ஆனால் சரியான நேரத்தில் கம்பேக் கொடுத்த வங்கதேச பவுலர்கள் ரோகித் மற்றும் கோலியை வெளியேற்றியது மட்டுமில்லாமல் களத்திற்கு வந்த சூர்யகுமாரையும் விரைவாகவே வெளியேற்றி ரன்வேகத்தை கட்டுப்படுத்தினர். ஆனால் 3வது வீரராக களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் எப்போதும் போல தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தி ரன்களை எடுத்துவந்தார். 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என ஜெட் வேகத்தில் சென்ற ரிஷப் பண்ட் 36 ரன்னில் வெளியேற இந்திய அணி சிறிய சறுக்கலை கண்டது.

ஆனால் நிதானமாக அடுத்து விக்கெட் விழக்கூடாது என்று விளையாடிய ஹர்திக் மற்றும் ஷிவம் துபே இருவரும் கடைசி 3 ஓவர்களை டார்கெட் செய்தனர். துபே 3 சிக்சர்களை பறக்கவிட, இறுதிவரை களத்தில் நின்று தீயாக ஆடிய ஹர்திக் பாண்டியா 27 பந்தில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து அரைசதமடித்து அசத்தினார். ஹர்திக்கின் இறுதிநேர அதிரடியால் 196 ரன்களை குவித்தது இந்திய அணி.

197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் அசத்தலாக பந்துவீசி 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார். பும்ரா, அர்ஸ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். பும்ரா வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தனர்.

சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி இன்றைய வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 24 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஹர்திக் பாண்டியா
இப்படி ஒரு விதியா? ’ஹிட் விக்கெட் + ரன்அவுட்’ 2 முறை அவுட்டாகியும் NOTOUT கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com