2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பான தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து முதலிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்ட நிலையில், ஒவ்வொரு அணியும் 4 லீக் போட்டிகளில் விளையாடின. இதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.
இந்நிலையில் இந்தியா இருக்கு குரூப்பில் இருந்து 4 போட்டிகளையும் வென்ற ஆஸ்திரேலியா மற்றும் 3 போட்டிகளை வென்ற நியூசிலாந்து இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. 4 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி குரூப் சுற்றோடு உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது.
ஆஸ்திரெலியா உடனான லீக் போட்டியில் தோற்றாலும், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால் இந்தியா அரையிறுதி செல்வதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது.
ஆனால் இன்று நடைபெற்ற நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மிகைக்குறைந்த டோட்டலை எட்டியதால் எப்படியும் பாகிஸ்தான் அணி வென்றுவிடும், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் என இந்திய ரசிகர்கள் எதிபார்த்தனர். ஆனால் 56 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி, தான் வெளியேறியது மட்டுமில்லாமல் இந்திய அணியை தொடலிருந்து வெளியே அழைத்துச்சென்றது.
பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து அணி 2016-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. இந்தியா அதிகாரப்பூர்வமாக 2024 மகளிர் டி20 உலகக்கோப்பையிலிருந்து லீக் சுற்றோடு வெளியேறியது.