உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
IND vs AFG
IND vs AFGpt desk
Published on

நேற்று பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்தை சந்தித்தாலும், சூர்யகுமார், ஹர்திக் சிறப்பாக விளையாடி ரன்களை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் 53 மற்றும் ஹர்திக் 32 ரன்கள் சேர்த்தனர்.

IND vs AFG
IND vs AFGpt desk

182 என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த அந்த அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IND vs AFG
‘இதனால தான் நீங்க ஸ்பெசல்..’! இந்தியாவை சரிவிலிருந்து காப்பாற்றிய SKY! ஆப்கானுக்கு 182 இலக்கு!

இந்தியா சார்பில் அர்சிதீப் சிங், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்களும், குல்தீப் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதன் மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, சூப்பர் 8 சுற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com