2025 IPL| ஹர்திக் பாண்டியாவிற்கு முதல் போட்டியிலேயே ஆப்பு வைத்த பிசிசிஐ.. ஏன் தெரியுமா?

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததால், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாட்விட்டர்
Published on

நடப்பு ஐபிஎல் தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நான்காவது அணியாக முன்னேறப்போவது யார் என்பதற்கான போட்டி, இன்று பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. இதில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இந்த நிலையில், 67-வது லீக் போட்டியில் நேற்று (மே 17) மும்பை இந்தியன்ஸ் அணியும் -லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதேநேரத்தில் இந்தப் போட்டியிலும் மும்பை அணி தோல்வியடைந்ததால், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து மோசமாக இந்த சீசனை நிறைவுசெய்துள்ளது.

இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததால், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதையும் படிக்க: CSK Vs RCB| ”தோனியும் நானும் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம்” - விராட் கோலி உருக்கம்!

ஹர்திக் பாண்டியா
“தோல்விக்கு முக்கிய காரணம் ஹர்திக் கேப்டன்சி” - பயிற்சியாளர் குழுவிடம் தெரிவித்த முன்னணி வீரர்கள்!

ஏற்கெனவே நடப்பு ஐபிஎல் தொடரில், 2 முறை மும்பை அணி இந்த தவறை செய்துள்ளது. அப்போது, முதல்முறையாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இந்த தவறைச் செய்தபோது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்து, இரண்டாவது முறையும் அதே தவறை அவர் செய்ததால், மொத்த மும்பை அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில்தான் நேற்று நடைபெற்ற போட்டியிலும், அதாவது 3-வது முறையாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கத் தவறியதால் விதிமுறைப்படி மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாpt web

அத்துடன் இப்போட்டிக்கான சம்பளத்திலிருந்து 30 சதவீதம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் மும்பை அணியின் அனைத்துப் போட்டிகளும் முடிந்துவிட்டன. எனவே அடுத்த ஐபிஎல் சீசனில் மும்பை அணியின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடப்புத் தொடரில் இதே தவறைச் செய்த டெல்லி அணி கேட்பன் ரிஷப் பண்ட்டிற்கும் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: CSK Vs RCB| ’சிஎஸ்கே தோற்பது உறுதி..’ மே 18-ல் எப்போதும் தோற்காத ஆர்சிபி.. குஷியில் கோலி ரசிகர்கள்!

ஹர்திக் பாண்டியா
2வது முறை| ஐபிஎல் விதியை மீறும் ஹர்திக் பாண்டியா.. தண்டிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com