”இந்தியாவுக்கு சாதகமாக மைதானமா? உங்க முட்டாள்தனத்தை நிறுத்துங்கள்” - மைக்கல் வாகனை விளாசிய ஹர்பஜன்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி வெற்றி அடைந்ததற்கு, மறைமுகமாக தனது குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன். இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங்.
மைக்கல் வாகன் - ஹர்பஜன் சிங்
மைக்கல் வாகன் - ஹர்பஜன் சிங்முகநூல்
Published on

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட். இந்த வரிசையில் நேற்று கயானாவில் நடைப்பெற்ற அரையிறுதி போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 171 ரன்கள் எடுக்க 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 16.4 ஓவரில் 103 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால், இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தவகையில், இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி நாளை மோதுகிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 போட்டியின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி நுழைந்தது ரசிகர்களிடத்தில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் சர்ச்சைக்குரிய வகையில், இந்திய அணியின் வெற்றியை மறைமுகமாக சாடியுள்ளது தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் கூறியது என்ன?

” சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தால் ட்ரினிடாட்டில் நடந்த முதல் அரை இறுதியில் விளையாடி இருக்கும். அப்படி நடந்திருந்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருக்கும். இருந்தாலும் நான் எந்த புகாரும் சொல்லப் போவதில்லை. இந்தியா நன்றாகவே ஆடியது. இந்திய அணிக்கு ஏற்ற வகையில் கயானா மைதானம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது" என்று அவர் மறைமுகமாக குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், இவரின் இந்த கருத்துக்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தனது கடும் கண்டனத்தை பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

அதில், “கயானா இந்திய அணிக்கு ஒரு நல்ல மைதானம் என்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? இரு அணிகளும் ஒரே மைதானத்தில் தான் விளையாடியது. டாஸ் வென்றது இங்கிலாந்து அணிக்குதான் சாதகமாக இருந்தது. முட்டாள்தனமாக இருப்பதை நிறுத்துங்கள். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா. உண்மையை ஏற்றுக்கொண்டு கடந்து செல்லுங்கள். உங்களது குப்பையான சிந்தனையை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆசியக் கோப்பை தொடரில்கூட இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திற்கு திடீரென ரிசர்வ் நாள் கொண்டு வரப்பட்ட போதும் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை என்றும் கேப்டன் மைக்கல் வாகன் விமர்சனங்களை முன் வைத்து இருந்தார்.

மைக்கல் வாகன் - ஹர்பஜன் சிங்
”ஒருத்தருக்கு சார்பா நடக்குதா”-ரிசர்வ் டே ஏன் இல்லை? விமர்சனத்தை சந்திக்கும் 2வது அரையிறுதி போட்டி!

அதில், “அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி திங்கட்கிழமை இரவு (அமெரிக்க நேரப்படி) வெற்றி பெற்றது.. செவ்வாய்கிழமை 4 மணி நேரம் விமானம் தாமதம் ஆனதால் பயிற்சி எடுக்கவோ, புதிய மைதானத்தை கணிக்கவும் நேரமில்லை.. இதுதான் வீரர்களுக்கு மரியாதையா?” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்தவகையில், மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் இவர் பேசி இருப்பது பெரும் பரபரப்பினை ஏறபடுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com