IPL | 4 விக்கெட் அள்ளிய சாய் கிஷோர்.. குஜராத் சுழலில் சிக்கிய PBKS! திவேட்டியா அதிரடியில் GT வெற்றி!

பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
GT vs PBKS
GT vs PBKScricinfo
Published on

பாதி கடலை தாண்டியுள்ள 2024 ஐபிஎல் தொடரில், நல்ல தொடக்கம் கிடைத்தும் வெற்றிகளை பெறமுடியாமல் தடுமாறிவரும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

GT vs PBKS
GT vs PBKS

சொந்த மண்ணில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

GT vs PBKS
’படுத்தே விட்டானய்யா..’ MI போட்டியில் ஏற்பட்ட 'Toss FIXING' பிரச்னை! கேமராமேன் செய்த தரமான சம்பவம்!

4 விக்கெட் வீழ்த்திய சாய் கிஷோர்..

நல்ல பந்துவீச்சை வைத்திருக்கும் குஜராத் அணிக்கு எதிராக, ஓப்பனர்களாக களமிறங்கிய கேப்டன் சாம்கரன் மற்றும் பிரப்சிம்ரன் இருவரும் அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். ஒருபுறம் கேப்டனை நிற்கவைத்து வேடிக்கை காட்டிய பிரப்சிம்ரன், 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என பறக்கவிட்டு துவம்சம் செய்தார். 5 ஓவர்களுக்கு 50 ரன்களை எடுத்துவந்த இந்த ஜோடி, 200 ரன்கள் டோட்டலை நோக்கி அதிரடியாக தொடங்கியது.

Prabhsimran Singh
Prabhsimran Singh

ஆனால் குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்களால், GT அணியின் தரமான ஸ்பின்னர்களுக்கு எதிராக சோபிக்க முடியவில்லை. அதிரடியான தொடக்கம் கொடுத்த பிரப்சிம்ரனை மோஹித் சர்மா 33 ரன்னில் வெளியேற்ற, அடுத்து பந்துவீச வந்த ரசீத் கான் மற்றும் நூர் அஹமது இருவரும் சாம்கரன், ரைல் ரோஸ்ஸோவ், லிவிங்ஸ்டன் என பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர்கள் அனைவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி கலக்கிப்போட்டனர்.

ரசீத் கான்
ரசீத் கான்

ஒருபக்கம் ரசீத் கான் மற்றும் நூர் அஹமது இருவரும் மிரட்டுகிறார்கள் என்றால், அடுத்து பந்துவீச வந்த தமிழக வீரர் சாய் கிஷார், கடந்த போட்டிகளில் பஞ்சாப் அணியின் ஸ்டார் வீரர்களாக எதிரணிகளை மிரட்டிய “ஷசாங் சிங் மற்றும் அஷூதோஸ் சர்மா” இருவரையும் சொற்ப ரன்களில் வெளியேற்றி கலக்கிப்போட்டார்.

சாய் கிஷோர்
சாய் கிஷோர்

குஜராத் அணி ஸ்பின்னர்களின் சுழலில் சிக்கிக்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, 99 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து நிலைகுலைந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தனியாளாக போராடிய ஹர்ப்ரீத் ப்ரார் 12 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் என கடைசிநேரத்தில் துவம்சம் செய்ய, 142 ரன்கள் என்ற டோட்டலை எட்டியது பஞ்சாப் அணி. அபாரமாக பந்துவீசி கேம் சேஞ்சராக மாறிய சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

GT vs PBKS
”தோனியை WC-க்கு கொண்டுவரலாம் தான்..ஆனால்” - விக்கெட் கீப்பர் யார்? என்ற கேள்விக்கு ரோகித் நச் பதில்!

ஃபினிசராக கலக்கிய திவேத்தியா!

143 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய டைட்டன்ஸ் அணிக்கு, விரைவாகவே ரிதிமான் சாஹாவை வெளியேற்றிய பஞ்சாப் கிங்ஸ் அணி டஃப் கொடுத்தது. ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறம் சாய் சுதர்சன் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் 5 பவுண்டரிகளை விரட்டிய சுப்மன் கில் ரன்களை எடுத்துவந்தார்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

டைட்டன்ஸ் அணி சிறப்பாக செல்ல விக்கெட்டை தேடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, சுப்மன் கில் மற்றும் டேவிட் மில்லர் இவரையும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றிய லிவிங்ஸ்டன் போட்டியில் உயிரை எடுத்துவந்தார். உடன் நிலைத்துநின்ற சாய் சுதர்சனும் 31 ரன்னில் வெளியேற, அடுத்து களத்திற்கு வந்த ஓமர்சாயும் 10 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

சாம்கரன்
சாம்கரன்

திடீரென அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி கம்பேக் கொடுக்க, முக்கியமான நேரத்தில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திவேட்டியா பஞ்சாப் அணியின் வெற்றிக்கனவை தட்டிப்பறித்தார். கடைசி 3 ஓவர்களுக்கு 25 ரன்கள் என போட்டி மாற, ரபடா வீசிய ஓரே ஓவரில் 20 ரன்களை பறக்கவிட்ட திவேட்டியா போட்டியை அழுத்தம் இல்லாமல் முடித்துவைத்தார். 18 பந்துகளில் 7 பவுண்டரிகளை பறக்கவிட்ட திவேத்தியா 36 ரன்கள் அடித்து அசத்த, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிப்பெற்றது.

திவேத்தியா
திவேத்தியா

4 விக்கெட்டுகளை வீழ்த்திய சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தவெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.

GT vs PBKS
29 முறை! இறுதியாக வந்து மரணபயம் காட்டிய கரன் சர்மா.. 1 ரன்னில் RCB பரிதாப தோல்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com