'2027 WC வரை கம்பீர்தான் Head Coach..' ஜூன் இறுதியில் அறிவிப்பு? யாருக்கும் வழங்கப்படாத அதிகாரம்?

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் இந்தமாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
gautam gambhir
gautam gambhirweb
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடைபெற்றுவரும் 2024 டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளாராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டின் கீழ், இந்தியா நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 2022 டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிப்போட்டிவரையிலும், 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிவரை வரையிலும் முன்னேறிய இந்திய அணி கோப்பை வெல்லாமல் வெறுங்கையோடு திரும்பியது.

ரோஹித் மற்றும் டிராவிட்
ரோஹித் மற்றும் டிராவிட்

இந்நிலையில், ராகுல் டிராவிட்டுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பாக 2024 டி20 உலகக்கோப்பை தொடர் பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த கோப்பையை இந்திய அணி வென்றுவிட்டாலும், ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நீடிக்கப்போவதில்லை. அதனால் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடுதலை பிசிசிஐ ஐபிஎல் தொடர் முடிவதற்கு முன்பாகவே தொடங்கியது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிpt web

முதலில் ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் ஃபிளெமிங், ஜஸ்டின் லாங்கர், விவிஎஸ் லக்சுமன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா முதலிய முன்னாள் ஜாம்பவான்களின் பெயர்கள் தலைமை பயிற்சியாளருக்கான பட்டியலில் இருந்தபோதும், பிசிசிஐ-ன் தேடுதலுக்கு விடை கிடைக்கவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்த்த எந்தவீரர்களும் விருப்பம் தெரிவிக்காததால் இறுதியில் கவுதம் கம்பீரை நோக்கி தலைமை பயிற்சியாளர் பதவி நகர்ந்தது.

gautam gambhir
gautam gambhir

ஐபிஎல் இறுதிப்போட்டியில் கம்பீர் ஆலோசகராக இருந்த கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றிய நிலையில், இறுதிப்போட்டியின் முடிவுக்கு பிறகு பிசிசிஐ அதிகாரிகள் கம்பீருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. அதில் கம்பீரின் அனைத்து கோரிக்கைக்கும் பிசிசிஐ ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், கம்பீர்தான் எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தொடரப்போகிறார் என்றும் கூறப்பட்டது.

gautam gambhir
”மரியாதை தெரியாத நபர்.. ஏனென்றால் அவருக்கு இதுவரை கிடைத்ததே இல்லை”! சேவாக்கை விளாசிய முன்.BAN வீரர்!

ஜூன் இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

2024 டி20 உலகக்கோப்பை வரைக்கும் எந்தவிதமான அறிவிப்பும் அறிவித்தால், அது ஆடும் இந்திய அணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் முக்கியமான அறிவிப்பை பிசிசிஐ தள்ளிவைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், எப்போது கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்படுவார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கம்பீர்
கம்பீர்

வெளியாகியிருக்கும் தகவலின் படி, “இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் இறுதி வாரத்தில் வெளியிடப்படும். புதிய உதவி ஊழியர்களையும் அவரே கட்டமைப்பார். அவர் விரும்பும் வேட்பாளர்கள் ஏற்கனவே உள்ள உறுப்பினர்களின் பெயர்களை பெறுவார்கள்”என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறாராம்.

gautam gambhir
“பணத்துக்காக IPL போனால் இதுதான் நடக்கும்” ட்ரோல் செய்த PAK ரசிகர்.. பங்கமாக கலாய்த்த முன். NZ வீரர்!

கவுதம் கம்பீர் கோரிக்கைக்கு ஒப்புதல்?

மேலும் டைனிக் ஜாக்ரான் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, தன்னுடைய உதவி ஊழியர்கள் குழுவை தானே கட்டமைக்கவேண்டும் என கம்பீர் வைத்த கோரிக்கைக்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி புதிய சப்போர்ட்டிங் ஸ்டாஃப் அனைவரையும் கவுதம் கம்பீரே தேர்ந்தெடுப்பார். அவர் விரும்பும் நபர்கள் முன்னர் இருந்த உறுப்பினர்களின் பதவியை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பீர்
கம்பீர்

தற்போது பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் ஆகியோர் உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது, ​​சஞ்சய் பங்கருக்கு பதிலாக ரத்தோர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். சாஸ்திரிக்குப் பிறகு டிராவிட் வந்தபோது, ​​ரத்தோர் தனது பொறுப்பை தக்க வைத்துக் கொண்டார். ஆனால் மாம்ப்ரே மற்றும் திலீப் ஆகியோர் டிராவிட்டின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

INDIA TEAM
INDIA TEAM web

தற்போது கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணியில் ரத்தோர், மாம்ப்ரே மற்றும் திலீப் ஆகியோர் உட்பட துணைப் பணியாளர்கள் பிரிவில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.

gautam gambhir
’5 வருடமா அணியிலேயே இல்லை.. ஆனால் கோலியை விட அவர்தான் சிறந்தவர்’! முன். PAK வீரர் அதிர்ச்சி கருத்து!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com