“தோனி தொட்ட உச்சத்தை இன்னொரு கேப்டனால் பெறமுடியும் என நினைக்கவில்லை” - கவுதம் காம்பீர் புகழாரம்!

சிஎஸ்கே வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை, இந்திய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் புகழ்ந்துள்ளார்.
தோனி, கவுதம் காம்பீர்
தோனி, கவுதம் காம்பீர்ட்விட்டர்
Published on

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை, இந்திய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் புகழ்ந்துள்ளார்.

“இந்திய அணி அதுவரை கண்டிராத மிகவும் வெற்றிகரமான கேப்டன் தோனி” என்று காம்பீர் கூறியுள்ளார்.

ஸ்டார் போர்ட்ஸ்-க்கு காம்பீர் அளித்துள்ள பேட்டியில், “சிஎஸ்கேவுக்கு எதிரானப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். போட்டியை கடந்து நட்பு, பரஸ்பர மரியாதை உள்ளிட்ட அனைத்தும் அப்படியேதான் இருக்கும். நான் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்தபோது, அவர் சிஎஸ்கேவுக்கு கேப்டனாக இருந்து அவரிடமும் கேட்டால் நான் சொன்ன பதிலையேதான் தருவார். வெற்றிக்கும் உறவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆம், இந்தியா கண்டிராத மிகவும் வெற்றிகரமான கேப்டன் தோனி. அவர் அடைந்த உச்சத்தை இன்னொருவரால் அடைய முடியும் என நினைக்கவில்லை. அவர் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார்” என்றார்.

இதையும் படிக்க: 5 விக்கெட்டுகள் வீழ்த்திய யஷ் தாக்கூர்.. மோசமான தோல்வியை பதிவுசெய்த GT! லக்னோ அசத்தல் வெற்றி!

தோனி, கவுதம் காம்பீர்
அரசியலில் இருந்து விலகும் கவுதம் காம்பீர்... காரணம் இதுதான்!

தோனிக்கு எதிராக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் குறித்து பேசுகையில், “தோனி மிகவும் நுட்பமான, திட்டவட்டமான மைண்ட்செட் கொண்டவர். ஸ்பின்னர்களை எப்படி கையாள்வது, அவர்களுக்கு எப்படி ஃபீல்டிங் செட் செய்வது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் கடைசிவரை போட்டியை கைவிடமாட்டார். 6 அல்லது 7ஆவது இடத்தில் இறங்கினாலும், அவர் களத்தில் இருக்கும்வரை போட்டியை முடித்துக் கொடுப்பார். கடைசி ஒரு ஓவரில் 20 ரன்கள் தேவை என்றாலும் தோனியால் அடித்து வெற்றிபெற வைக்க முடியும்” என்றார் கவுதம் காம்பீர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பல சாதனைகள் படைத்து இருந்தாலும் 2011 உலகக்கோப்பை அதில் மகுடம் போன்றது. அந்தக் கோப்பையை வென்றதில் தோனியை பலரும் புகழ்ந்துவரும் நிலையில், அந்த புகழ் தோனியை மட்டும் சார்ந்தது அல்லது என்று தொடர்ச்சியாக கூறி வந்தவர் காம்பீர். அத்துடன் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தான் சதம் அடிக்காமல் நழுவவிட்டதற்கும் தோனி சொன்ன வார்த்தையே காரணம் என்றும் கூறியிருப்பார். இப்படி பல நேரங்களில் தோனி குறித்து காட்டமான விமர்சனங்களை வைத்துவந்த காம்பீர், தற்போது தோனியை புகழ்ந்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை.. தரமான கம்பேக் கொடுத்த MI! Hardik-க்கு முதல் வெற்றி!

தோனி, கவுதம் காம்பீர்
'What a Catch'! காற்றில் பறந்த மதிஷா பதிரானா! நம்பமுடியாத ரியாக்சன் கொடுத்த தோனி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com