பும்ராவுக்கு ஆதரவு! ரோகித், கோலிக்கு ஆப்பு.. Teamஐ தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கவுதம் கம்பீர்

ஜஸ்பிரித் பும்ரா போன்ற வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் அணியில் ஓய்வு அளிக்கப்படும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறி இருக்கிறார்.
கோலி, பும்ரா, ரோகித், கம்பீர்
கோலி, பும்ரா, ரோகித், கம்பீர்எக்ஸ் தளம்
Published on

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சமீபத்திய டி20 உலகக்கோப்பையை மீண்டும் வென்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வுபெறுவதாக அறிவித்தனர்.

அதேசமயம், ”ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம்” எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே இளம்வீரர்கள் கொண்ட இந்திய அணியே , சிறிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் இருந்தும் வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் அத்தொடர்களில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயன்றனர்.

இதற்காக, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் அவர்கள் விலக்கு கேட்டு இருந்தனர். ஆனால், அதற்கு கவுதம் கம்பீர் முட்டுக்கட்டை போட்டார். அதன் காரணமாகவே, விடுமுறையில் இருந்த அவர்கள், தற்போது இலங்கை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதேசமயம், பும்ரா போன்ற வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மட்டும் அணியில் ஓய்வு அளிக்கப்படும் எனவும் கூறி இருக்கிறார்.

இதையும் படிக்க: மத்தியப் பிரதேசம்|சாலை அமைக்க எதிர்ப்பு.. போராடிய 2 பெண்கள் மீது மண்ணைக் கொட்டி மூடிய கொடூரம் #Video

கோலி, பும்ரா, ரோகித், கம்பீர்
“எங்கள் உறவு TRP-க்கானது அல்ல.. இந்தியாவை பெருமைப்படுத்துவோம்!” - விராட் கோலி குறித்து கம்பீர்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இந்திய அணியில் பும்ரா போன்ற முக்கிய வேகப் பந்துவீச்சாளருக்கு நாங்கள் நிச்சயம் ஓய்வு அளிப்போம். அவர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்பதால் அவர்களது உடற்தகுதியை நாங்கள் கருத்தில்கொள்வோம். பும்ரா மட்டுமல்ல, மற்ற வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் அவர்களது பணிச்சுமைக்கு ஏற்ப ஓய்வு அளிக்கப்படும்.

ஆனால், பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடும்போது அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனவே, பேட்ஸ்மேன்கள் இனி அனைத்து தொடர்களிலும் பங்கேற்பார்கள். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் ஓய்வு பெற்றுவிட்டதால் இனி அவர்கள் இந்தியா ஆடும் அனைத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்பார்கள்.

இதையும் படிக்க: ஆபரேஷனில் சிக்கிய ஊசி! வலியால் துடித்த பெண்.. அலட்சியத்தில் மருத்துவமனை.. 20 ஆண்டுக்கு பிறகு நஷ்டஈடு

கோலி, பும்ரா, ரோகித், கம்பீர்
“லீவ் கேன்சல் பண்ணிட்டு ODI தொடருக்கு வாங்க..” சீனியர் வீரர்களுக்கு கவுதம் கம்பீர் கோரிக்கை!

விராட் மற்றும் ரோகித்திடம் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதம் உள்ளது. அவர்கள் சர்வதேச தரத்திலான வீரர்கள். எந்த ஒரு அணியிலும் அவர்கள் இருவரையும் நாம் ஆட வைக்கலாம். அடுத்து சாம்பியன்ஸ் டிராபி, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ஆகியவை உள்ளன. அதன்பின்பு அவர்கள் உடற்தகுதியுடன் இருந்தால், 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையிலும் பங்கேற்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை அணியைவிட்டு நீக்கும் எண்ணத்தில் இல்லை என்பதையும் மறைமுகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.

அதேசமயம், அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இனி ஓய்வு எடுக்க முடியாது. இந்தியா ஆடும் அனைத்து தொடர்களிலும் அவர்கள் பங்கேற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் அவர்களின் எதிர்கால கிரிக்கெட்டில் சிக்கல் விழும் என அதன் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா| தொடரும் மாரடைப்பு மரணங்கள்|ஜிம்மில் பயிற்சிசெய்த தொழிலதிபர் சுருண்டுவிழுந்து உயிரிழப்பு

கோலி, பும்ரா, ரோகித், கம்பீர்
“இந்திய அணி பாதுகாப்பான கைகளில் சென்று சேர்ந்துள்ளது..” கவுதம் கம்பீர் தலைமை குறித்து பிரெட் லீ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com