2011 WC இந்திய அணியில் இடம்பிடித்த கேரி கிறிஸ்டன்.. பாகிஸ்தான் அணி பயிற்சியாளராக நியமனம்!

பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கேரி கிறிஸ்டன்
கேரி கிறிஸ்டன்ட்விட்டர்
Published on

இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து பயிற்சியாளர்களான கிராண்ட் பிராட்பர்ன், மோர்னே மோர்க்கல், ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோரும், இயக்குநர் மிக்கி ஆர்தரும் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் பாபர் அசாமும் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

இதையடுத்து பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஷாஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் அணிக்கான கேப்டனாக ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர். மேலும் அணியின் ஆலோசகராகாவும் முகமது ஹபீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதன்பின் பாகிஸ்தான் அணி மேற்கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் படுதோல்வியைத் தழுவியதை அடுத்து, அணியின் ஆலோசகர் பொறுப்பிலிருந்த முகமது ஹபீஸும் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையும் படிக்க: ”ஹர்திக் பாண்டியாவிற்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை” - கடுமையாக விளாசிய இர்ஃபான் பதான்!

கேரி கிறிஸ்டன்
ஜெய்ஸ்ரீராம் சர்ச்சை: ஐ.சி.சி-யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்

மேலும் ஷாஹீன் ஷா அஃப்ரிடி பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் பாபர் ஆசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கியுள்ளதால் அணியின் முழுநேர பயிற்சியாளரை நியமிக்கும் பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரப்படுத்தியது. அதன்படி, தற்போது பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் பயிற்சியாளாராக கேரி கிறிஸ்டனும், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரி கிறிஸ்டன், கடந்த 2011-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர், இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் ஆலோசகராக உள்ளார். மேலும் அவர், மே 22 முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணியுடன் பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்க அணிக்காக 101 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கேரி கிறிஸ்டன், 7,289 ரன்களையும், 185 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,798 ரன்களையும் எடுத்துள்ளார்.

இதையும் படிக்க: டி20 போட்டியில் இளம் வீரர்களுக்கு வழிவிட கோலி, ரோகித் ஓய்வு பெற வேண்டுமா? யுவராஜ் சிங் சொல்வது என்ன?

கேரி கிறிஸ்டன்
கிரிக்'கெத்து' 20: இந்திய அணியை நம்பர் 1 டெஸ்ட் அணியாக மாற்றிய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com