”மரியாதை தெரியாத நபர்.. ஏனென்றால் அவருக்கு இதுவரை கிடைத்ததே இல்லை”! சேவாக்கை விளாசிய முன்.BAN வீரர்!

வங்கதேச அணியின் மூத்தவீரர் ஷாகிப் அல் ஹசனை விமர்சித்து பேசியதற்காக, விரேந்திர சேவாக்கை முன்னாள் வங்கதேச வீரர் ஒருவர் விமர்சித்து பேசியுள்ளார்.
ஷாகிப் - கயஸ் - சேவாக்
ஷாகிப் - கயஸ் - சேவாக்web
Published on

2024 டி20 உலகக்கோப்பை தொடர் பரபரப்பாக நடந்துவருகிறது. லீக் போட்டியில் அபாரமாக விளையாடிய ”தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா” முதலிய 6 அணிகள் தங்களுடைய சூப்பர் 8 ஸ்பாட்டை தக்கவைத்துள்ளன.

கடைசி இரண்டு இடங்களுக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே மோதல் இருந்து வருகிறது.

Bangladesh
Bangladesh

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 4 ரன்களில் வங்கதேச அணி தோற்றிருந்தாலும், ஷாகிப் அல் ஹசனின் அபாரமான பேட்டிங்கால் நெதர்லாந்து அணிக்கு எதிராக வெற்றிபெற்று சூப்பர் 8 ஸ்பாட்டை கிட்டத்தட்ட உறுதிசெய்துள்ளது வங்கதேசம்.

இந்நிலையில் முதலிரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாத ஷாகிப் அல் ஹசனை விமர்சித்திருந்த சேவாக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலான ஒரு கருத்தை முன்னாள் வங்கதேச வீரர் இம்ருல் கயஸ் பகிர்ந்துள்ளார்.

ஷாகிப் - கயஸ் - சேவாக்
”உங்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை..” - செய்தியாளரிடம் ஆவேசமாக பேசிய பட்லர்! என்ன நடந்தது?

சேவாக்கின் கருத்திற்கு பதிலடி கொடுத்த ஷாகிப்!

முதலிரண்டு ஆட்டங்களில் வெறும் 8, 3 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பிய ஷாகிப் அல் ஹசனை விமர்சித்து பேசியிருந்த விரேந்திர சேவாக், “கடந்த உலகக் கோப்பையின்போதே ஷாகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும். ஹூக்ஸ் ஷாட் மற்றும் புல்ஷாட் ஆடுவதற்கு நீங்கள் ஒன்றும் மேத்யூ ஹைடனோ, கில்கிறிஸ்ட்டோ கிடையாது. நீங்கள் ஒரு வங்கதேச வீரர், உங்கள் திறனுக்கேற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். ஒருவேளை உங்களால் முடியவில்லை என்றால், நீங்களாகவே நான் ஓய்வுபெற விரும்புகிறேன் என முன்வந்து கூறிவிடுங்கள்” என்று விமர்சித்து பேசியிருந்தார்.

shakib - sehwag
shakib - sehwag

சேவாக்கின் இந்த கருத்திற்கு “யார் சேவாக்?” என கேட்டு பதிலடி கொடுத்த ஷாகிப் அல் ஹசன், “ஒரு வீரர் இதுபோன்ற கேள்விக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீரரின் பணி என்னவென்றால், ஒரு பேட்ஸ்மேனாக இருந்தால் அவர் அணிக்காக நன்றாக பேட்டிங் செய்யவேண்டும், பந்துவீச்சாளராக இருந்தால் நன்றாக பந்து வீசவேண்டும். அதேபோல பீல்டராக இருந்தால் சிறப்பாக கேட்ச்களை எடுக்க வேண்டும். தற்போது அணியில் இருக்கும் ஒரு வீரர் அணிக்காக எவ்வளவு பங்களிக்க முடியும் என்பதுதான் முக்கியம்” என்று ஷாகிப் கூறினார்.

ஷாகிப் - கயஸ் - சேவாக்
யார் சேவாக்? அவருடைய கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை! - ஷாகிப் அல் ஹசன்

சேவாக் ஒரு மரியாதை தெரியாத நபர்..

இந்திய முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கின் இத்தகைய கருத்தை விமர்சிக்கும் வகையில், முன்னாள் வங்கதேச பேட்ஸ்மேன் இம்ருல் கயஸ் “சேவாக்கிற்கு மரியாதை என்பதே தெரியாது” என விமர்சித்துள்ளார்.

சேவாக் குறித்து பேசியிருக்கும் அவர், “அவரைப் போன்ற ஒரு ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் இதுபோன்ற விசயங்களைச் சொல்லும்போது எப்படி நினைத்து கூறுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. சச்சின்-டிராவிட் முதலிய ஜாம்பவான்கள் இப்படி பேசுவதை நீங்கள் ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள், ஏனென்றால் அவர்கள் மற்ற வீரர்களுக்கு அந்தளவு மரியாதை கொடுப்பார்கள். ஆனால் சேவாக் அப்படியில்லை, ஏனெனில் அவருக்கு அப்படியான மரியாதை அவரது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் கிடைக்கவில்லை. அதனால்தான் மற்ற வீரர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை” என்று CricFrenzy உடன் இம்ருல் கூறியுள்ளார்.

shakib - sehwag
shakib - sehwag

மேலும் "விரேந்திர சேவாக் தனது வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற கருத்துக்களை மட்டுமே கூறிவருகிறார். முதலில் எங்கள் நாட்டில் கிரிக்கெட்டுக்கு ஏற்ற சூழல் இல்லை என்றும், எங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் இல்லை என்றும் பல்வேறு கருத்துகளை கூறினார். ஆனால் நாங்கள் அந்த விக்கெட்டுகளை களத்தில் வீழ்த்தினோம்.

Shakib Al Hasan
Shakib Al Hasan

ஷாகிப் ஒன்றும் ஓரிரு நாட்களில் தற்போது இருக்கும் ஷாகிப் அல் ஹசனாக மாறவில்லை. அவரது கிரிக்கெட் கரியரை பார்த்தால் பல சாதனைகளை அதில் பார்க்கலாம். நீண்ட காலமாக மூன்று ஃபார்மேட்டிலும் நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார். அப்படிப்பட்ட கிரிக்கெட் வீரருக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து பேச வேண்டும்“ என்று முன்னாள் வங்கதேச கிரிக்கெட் வீரர் கூறினார்.

ஷாகிப் - கயஸ் - சேவாக்
“பணத்துக்காக IPL போனால் இதுதான் நடக்கும்” ட்ரோல் செய்த PAK ரசிகர்.. பங்கமாக கலாய்த்த முன். NZ வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com