‘இதுக்கு ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து கிட்ட தோத்தே போயிருக்கலாம்’! WI-க்கு மரண அடி கொடுத்து வென்ற ENG!

2024 டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் அதிரடியாக தொடங்கப்பட்டுள்ளன.
wi vs eng
wi vs engcricinfo
Published on

2024 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான லீக் போட்டிகளை கடந்து முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. லீக் போட்டி முழுவதும் 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், அதில் “தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா” முதலிய 8 அணிகள் சிறப்பாக செயல்பட்டு சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

லீக் போட்டிகள் முழுவதும் மழையின் குறுக்கீடு காரணமாகவும், லோ ஸ்கோரிங் மேட்ச் மற்றும் சிறிய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் காரணமாகவும், உண்மையில் உலக்க்கோப்பை தான் நடக்கிறதா என தோன்றுமளவு சற்று மந்தமாகவே இருந்துவந்தது.

australia
australiaweb

ஆனால் தற்போது சாம்பியன் அணிகளுக்கு இடையேயான மோதல்கள் என்பதால் சூப்பர் 8 சுற்றுகள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய முதலிரண்டு போட்டிகளும் நல்ல ரன்சேஸிங் போட்டியாக அமைந்து விருந்து படைத்துள்ளது. லீக் சுற்றிலிருந்து சூப்பர் 8-க்கு முன்னேறுமா அல்லது வெளியேறுமா என அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த இங்கிலாந்து அணி, தற்போது பலம்வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து தோற்கடித்துள்ளது.

wi vs eng
’என் பயிற்சியாளர் வாழ்க்கையில் இப்படிஒரு மோசமான அணியை பார்த்ததில்லை..’ PAK-ஐ விளாசிய கேரி கிர்ஸ்டன்!

காட்டடி அடித்த இங்கிலாந்து.. கதிகலங்கிய வெஸ்ட் இண்டீஸ்..

அதிரடி பேட்டிங்கிற்கு பேர் போன இரண்டு அணிகளும் மோதுகிறது என்பதால் அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் போட்டி தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வுசெய்ய, எதற்காக பவுலிங் எடுத்தோம் என வேதனை படுமளவு சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி இங்கிலாந்தை கதிகலங்க வைத்தனர்.

பிரண்டன் கிங்
பிரண்டன் கிங்

எப்படியும் 200 ரன்களுக்கு மேலான டோட்டல் வரும் என எதிர்ப்பார்த்த போது, 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்த பிராண்டன் கிங் ரிட்டயர்டு ஹர்ட் மூலம் பாதியிலேயே வெளியேறினார். அதற்குபிறகு களத்தில் சார்லஸ் மற்றும் பூரன் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும் மிடில் ஓவரில் சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தியது. ஆனால் மிடில் ஆர்டரில் களத்திற்கு வந்த ரோவ்மன் பவல் 5 சிக்சர்களை பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தார்.

ரோவ்மன் பவல்
ரோவ்மன் பவல்

ஆனால் அதிகநேரம் அவரை நிலைக்க விடாத இங்கிலாந்து அணி 36 ரன்னில் வெளியேற்ற, சரியான நேரத்தில் பூரனை காலிசெய்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர். உடன் ரஸ்ஸலும் வந்தவேகத்தில் நடையை கட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்களை மட்டுமே எட்டியது.

சால்ட்
சால்ட்

181 என்ற இலக்கு என்பதால் எப்படியும் போட்டி கடைசிவரை செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மரண ஃபார்மில் இருக்கும் தொடக்க வீரர் பிலிப் சால்ட், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நைட் மேராக மாறினார். 7 பவுண்டரிகள் 5 சிக்சர் என திரும்பிய பக்கமெல்லாம் வானவேடிக்கை காட்டிய அவர், 87 ரன்களை குவித்து மிரட்டிவிட்டர்.

பேர்ஸ்டோ
பேர்ஸ்டோ

ஜோஸ் பட்லர் 25 ரன்கள், மொயின் அலி 13 ரன்கள் என அடித்தாலும் 4வது வீரராக களத்திற்கு வந்த பிதாமகன் ஜானி பேர்ஸ்டோ 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்ய 18வது ஓவரிலேயே இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

wi vs eng
ஒரே வீரராக 18 சிக்சர்கள்.. 41 பந்தில் 144 ரன்கள்! அதிவேக சர்வதேச டி20 சதமடித்து புதிய உலகசாதனை!

பேசாம ஆஸ்திரேலியா தோத்தே போயிருக்கலாம்..

லீக் சுற்றிலிருந்து இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும் என சூழல் இருந்தது. அப்போது ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஹசல்வுட் “இங்கிலாந்து எங்களுக்கு எதிராக சிறந்த டி20 கிரிக்கெட் ஆடியுள்ளது, அதனால் அவர்கள் அடுத்த சுற்றுக்கு வரவேண்டாம் என தான் எல்லா அணிகளும் நினைப்பார்கள். ஆஸ்திரேலியாவும் அதைத்தான் எதிர்ப்பார்க்கும்” என கூறியிருந்தார். அது அப்போது உலக கிரிக்கெட்டில் பேசுபொருளாக மாறியது.

பாட் கம்மின்ஸ் - ஹசல்வுட்
பாட் கம்மின்ஸ் - ஹசல்வுட்

இருப்பினும் ஸ்காட்லாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற காரணமாக அமைந்தது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு விழுந்த அடியை பார்த்த ரசிகர்கள் “பேசாம ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து கிட்ட தோத்தே போயிருக்கலாம்” என கூறிவருகின்றனர்.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா

மற்றொரு சூப்பர் 8 போட்டியில் டிகாக்கின் அதிரடியால் அமெரிக்கா அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி அசத்தியுள்ளது.

wi vs eng
PAK வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. அதுஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்! - சாடிய முன். PAK வீரர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com