சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறுகிறதா பாகிஸ்தான்? யாருக்கு வாய்ப்பு.. வில்லனாக மாறும் மழை?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிpt web
Published on

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் 4 பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றுகள் ஜூன் 19 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சில அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கு பிற அணிகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழலும் எழுந்துள்ளது.

குரூப் Aவில், இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், அடுத்தபடியாக அமெரிக்காவே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. ஏனெனில், அமெரிக்கா அடுத்து தான் சந்திக்க இருக்கும் அயர்லாந்து அணியை வீழ்த்தினால் போதும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆனால், பாகிஸ்தான் முன்னேற வேண்டுமெனில், அயர்லாந்திடம் அமெரிக்கா தோற்க வேண்டும், அதேசமயத்தில், பாகிஸ்தான் அயர்லாந்துடன் விளையாடும் போது அவர்களை வீழ்த்தியாக வேண்டும். இதன்மூலம் மட்டுமே பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். ஆனால், சூப்பர் 8 சுற்றில் விளையாட அமெரிக்காவிற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
48 பேரின் உயிரைப் பறித்த குவைத் தீ விபத்து எப்படி நிகழ்ந்திருக்கலாம்? வரைகலை காட்சி விளக்கம்

ஏனெனில், ப்ளோரிடாவில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இன்று இரவு அமெரிக்கா, அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டி மழை வெள்ளத்தால், ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.

இப்போட்டி ரத்தானால், அமெரிக்க அணி சூப்பர் 8 (எயிட்) சுற்றுக்கு தகுதிப் பெறும். பாகிஸ்தான் அணி வெளியேறும் சூழல் உருவாகும். இதனால், பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அதேபோல், நாளை நடைபெறும் இந்தியா - கனடா அணிகள் இடையிலான போட்டியும் மழை காரணமாக தடைப்படலாம். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குரூப் Aபிரிவில் புள்ளிப்பட்டியலைப் பொருத்தவரை, இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அமெரிக்க அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வென்றுள்ள பாகிஸ்தான் ரன்ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல், மூன்றில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ள கனடா நான்காவது இடத்திலும், வெற்றிக் கணக்கை துவக்காத அயர்லாந்து 5 ஆவது இடத்திலும் உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
"பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது" - உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com