CSKvsRR | சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 24 பேர் அதிரடி கைது!

சென்னை - ராஜஸ்தான் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்ற 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
CSK
CSK@ChennaiIPL| Twitter
Published on

கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், மீண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், 17-வது ஐபிஎல் லீக் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. தோனி தலைமையிலான சென்னை அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இதில், சென்னை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

CSK
CSKvRR | 15 ஆண்டுகளுக்குப் பின், சென்னையில் சென்னையை வென்ற RR... மண்ணின் மைந்தனுக்கு ஆட்டநாயகன்!
தோனி, சஞ்சு சாம்சன்
தோனி, சஞ்சு சாம்சன்ட்விட்டர்

இந்நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட்டை, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்ற 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

தனிப்படை காவல் குழுவினர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேசன், அஞ்சப்பர் உணவகம் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அங்கு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை, சட்ட விரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக, 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரசிகர்கள்
ரசிகர்கள்

கைதுசெய்யப்பட்ட 24 நபர்களிடமிருந்து, சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த 62 டிக்கெட்டுகளும் 65,700 ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. முன்னதாக, கவுன்டரில் டிக்கெட் விற்பனை துவங்கியபோது 14 மணிநேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று காத்திருந்தும் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றும், 1500 முதல் 2000 டிக்கெட்டுகளை மட்டும் விற்றுவிட்டு டிக்கெட் இல்லை என்று கவுன்டரில் கூறுவதாகவும், ரசிகர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

1,500 ரூபாய் விலையுள்ள டிக்கெட்கள் 4,000 முதல் 8,000 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறுயிருந்தனர். சிலர் முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்கிவைத்துக்கொண்டு அவற்றைக் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதனைத் தடுக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com