T20 World cup: ஆப்கானிஸ்தானுடன் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி – சிக்கலான அரையிறுதி வாய்ப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புதிய சாதனையைப் படைத்த அடுத்த போட்டியிலேயே தோல்வியை தழுவி அதிர்ச்சி அளித்துள்ளது ஆஸ்திரேலியா. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பை எவ்வாறு சிக்கலாக்கியுள்ளது என்பதை பார்க்கலாம்...
AFG vs AUS
AFG vs AUSpt desk
Published on

செய்தியாளர்: செல்வக் கண்ணன்

நடப்பு உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு போட்டியும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கும் படி அமைகிறது. பலம் வாய்ந்த நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றிலே வெளியேறி அதிர்ச்சியளித்தன. அந்த அணிகளை வீழ்த்திய அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் சிறப்பாக விளையாடி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. அதன்படி, சூப்பர் 8 பிரிவு ஒன்றில் உள்ள ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் இடையே விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

AFG
AFGpt desk

உலகக் கோப்பை டி20 தொடரில் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்த ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. சிறப்பான பந்து வீச்சினால் ஆஸ்திரேலிய பேட்டர்களை திணறிடித்த ஆப்கானிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு செல்வதில் சிக்கல் உருவாகியுள்ளது.

AFG vs AUS
AFGvBAN |அரையிறுதி சென்று சாதனை படைக்குமா ஆப்கானிஸ்தான்..?

ஆஸ்திரேலியா அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில், எதிரணியாக இந்தியா இருக்கிறது. நடப்பு தொடரில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இரு அணிகள் இடையிலான போட்டி மிகவும் கடினமாக இருக்கும். ஒரு வேளை இப்போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடையும் பட்சத்தில், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தானும் தோல்வி அடைந்தால் மட்டுமே அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா முன்னேறும். ஆனால், ஆப்கன் அப்போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லும், ஆஸ்திரேலியா சொந்த ஊர்திரும்பும்.

AUS vs AFG
AUS vs AFGpt desk

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெற்றி இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பையும் சற்று சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் பெரும் தோல்வியை சந்தித்தால், ரன்ரேட் அடிப்படையில் இந்தியா வெளியேறவும் சிறிய வாய்ப்புள்ளது. இச்சூழலில் இக்குழுவில் அடுத்து வரும் இரு போட்டிகளும் உன்னிப்பாக கவனிக்க கூடிய போட்டியாக மாறியுள்ளது...

AFG vs AUS
“அடுத்த போட்டியில் நாங்கள் வென்று செமிபைனல் செல்ல இந்தியாதான் சரியான அணி”! எச்சரித்த AUS கேப்டன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com