“துபே, ஹர்திக் இருவரும் அணியில் இருந்தால் தான் வெல்ல முடியும்”! - அம்பத்தி ராயுடு ஆதரவுக்கரம்.. ஆனா?

ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஒரே இடத்திற்கு போட்டியிட வாய்ப்பில்லை என்று அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.
hardik - dube
hardik - dubeweb
Published on

நடப்பு 2024 ஐபிஎல் தொடர் வரும் மே 26-ம் தேதி முடிவடையவிருக்கும் நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் 2-ம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது. எந்த 11 வீரர்களை இந்திய அணி உலகக்கோப்பைக்குள் எடுத்துச்செல்லப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவரும் நிலையில், பல்வேறு முன்னாள் வீரர்கள் அவர்களுடைய 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், பினிசர் மற்றும் வேகப்பந்துவீச்சாளருக்கான இடங்கள் தான் இந்திய அணிக்கு பிரச்னையாக இருந்துவரும் நிலையில், அந்த இடத்தில் எந்த வீரர்களை இந்திய அணி தேர்ந்தெடுக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிpt web

ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரம் இந்திய அணி தேர்வுக்குழு 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்ந்தெடுக்கும் என கூறப்படும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு தன்னுடைய டி20 உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளார்.

hardik - dube
”தயவுசெய்து ஷிவம் துபேவை உலகக்கோப்பைக்கு எடுங்க..”! - அஜித் அகர்கருக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை!

துபே, ஹர்திக் இருவரும் அணியில் இருக்க வேண்டும்..

ஷிவம் துபே அல்லது ஹர்திக் பாண்டியா இரண்டு வீரர்களில் ஒருவர் தான் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என கூறப்படும் நிலையில், இரண்டு வீரர்களுக்கும் தனித்தனியா இடம் இந்திய அணியில் இருக்கிறது என்று அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.

துபே, ஹர்திக் இருவரும் அணியில் இருக்கவேண்டிய அவசியம் குறித்து கூறிய ராயுடு, “துபே மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஒரே இடத்திற்கு போட்டியிடவில்லை. இந்திய அணியில் ஃபினிஷர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இருக்கிறார்கள். ஷிவம் துபே மாதிரியான பேட்ஸ்மேன் 4 அல்லது 5 வது இடத்தில் வரவேண்டும், ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தும் நேரத்தில், போட்டி மந்தமாகும் நேரத்தில் துபேவால் பெரிய ஹிட்டர்களை அடித்து ரன்களை எடுத்துவர முடியும். ஆனால் அதேநேரத்தில் 16-20 ஓவர்களில் துபேவின் ஸ்டிரைக்ரேட் அந்தளவு ஆபத்தானதாக இல்லை, அந்த இடத்தில் ஹர்திக் பாண்டியா அல்லது ரவிந்திர ஜடேஜா இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்று க்றிக்இன்ஃபோவிடம் கூறியுள்ளார்.

துபே
துபே

ஆனால் அதேநேரத்தில் தன்னுடைய டி20 உலகக்கோப்பைக்கான அணியை பிக் செய்திருக்கும் அம்பத்தி ராயுடு, ஹர்திக் பாண்டியாவிற்கு இடமளிக்கவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ரிஷப் பண்ட், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா மூன்று வீரர்களுக்கு பதிலாக ரியன் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் தினேஷ் கார்த்திக்கை தேர்வுசெய்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

அம்பத்தி ராயுடுவின் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரியான் பராக், ஷிவம் துபே, ரின்கு சிங், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்.

hardik - dube
‘ஹர்திக் பாண்டியாவை ஒதுக்கிய சேவாக்..’! டி20 WC-க்கான இந்திய அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com