“இங்கே செய்யமுடியாததை டி20 உலகக்கோப்பையில் செய்யுங்கள்..”! சஞ்சு சாம்சனுக்கு அம்பத்தி ராயுடு ஆதரவு!

2008-ம் ஆண்டுக்கு பிறகு 16 வருடங்களாக கோப்பை வெல்லாமல் தடுமாறி வரும் ராஜஸ்தான் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்டு வெளியேறியது.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்x
Published on

2024 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோப்பை வெல்வதற்கான போட்டியில் 10 அணிகள் தீவிர பலப்பரீட்சை நடத்திய நிலையில், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு” முதலிய 4 அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தின.

குவாலிஃபையர் 1 மோதலில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியது.

Rajasthan Royals
Rajasthan Royals

இந்நிலையில் எந்த அணி இரண்டாவதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற கேள்விக்கு பதிலாக, குவாலிஃபையர் 2 சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியில் 176 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, வெல்லவேண்டிய இடத்திலிருந்த போட்டியை தங்களுடைய சுமாரான பேட்டிங் மூலம் கோட்டைவிட்டு வெளியேறியது.

16 வருடங்களாக கோப்பை வெல்லாமல் தடுமாறி வரும் ராஜஸ்தான் அணியை கோப்பைக்கு அருகாமையில் அழைத்துச்சென்ற போதும், முக்கியமான நேரத்தில் மோசமாக விளையாடி கோட்டைவிட்ட சஞ்சு சாம்சனை முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். கவாஸ்கர் விமர்சித்திருக்கும் அதேநேரத்தில் மற்றொரு முன்னாள் இந்திய வீரரான அம்பத்தி ராயுடு, சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒருநாள் சிறந்த கேப்டனாக மாறுவீர்கள்!

கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டாலும் தொடர் முழுவதும் பேட்டிங் மற்றும் கேப்டன்சி இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை அம்பத்தி ராயுடு பாராட்டினார்.

சஞ்சு சாம்சன் குறித்து பேசியிருக்கும் ராயுடு, “சஞ்சு சாம்சன் வருத்தப்படாதீர்கள், நீங்கள் ஒரு நாள் சிறந்த கேப்டனாக மாறுவீர்கள். இந்த ஐபிஎல்லில் உங்களுடைய பேட்டிங் மற்றும் RR அணி விளையாடிய விதம் குறித்து நீங்கள் பெருமைப்பட வேண்டும்.

ஒரு கேப்டனாக முன்னணியில் இருந்து நீங்கள் சிறப்பாக வழிநடத்தினீர்கள். இதைத்தான் ஒரு கேப்டனிடமிருந்து ஒவ்வொரு அணியும் எதிர்ப்பார்க்கக்கூடியது, அதை நீங்கள் உங்களால் முடிந்தவரை சிறப்பாக கொடுத்தீர்கள். ஐபிஎல்லின் பிளேஆஃப்கள் எப்போதும் தந்திரமானவை” என்று ஆதரவாக பேசினார்.

sanju samson
sanju samson

அதுமட்டுமல்லாமல் இங்கே விட்டதை உங்களால் மீண்டும் பெறமுடியும் என டி20 உலகக்கோப்பை குறித்து பேசிய அவர், “முடிவடையாத இந்த வணிகத்தை முடிக்க உங்களால் விரைவில் திரும்பி வரமுடியும். 2024 டி20 உலகக் கோப்பையில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அம்பதி ராயுடு கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com