தோனியின் பக்கா ஸ்கெட்ச்.. ரஹானே செய்த தரமான சம்பவம்! ஆனந்த கண்ணீரில் சிஎஸ்கே ஃபேன்ஸ்!

ஐபிஎல் மினி ஏலத்தில் அஜிங்கிய ரஹானே ரூ.50 லட்சத்துக்கு சென்னை அணியால் எடுக்கப்பட்டிருந்தார்.
ரஹானே,
ரஹானே,ட்விட்டர்
Published on

மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான 12-வது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பௌலிங்கை தேர்வு செய்ததை அடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக இஷான் கிஷன் 32 ரன்களும், டிம் டேவிட் 31 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் கான்வே, முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆக, ருதுராஜ் உடன் ரஹானே கைக்கோர்த்தார். நடப்புத் தொடரில், குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிராக சென்னை அணி விளையாடியபோது அதில் ரஹானே களமிறக்கப்படாத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ரஹானே களமிறக்கப்பட்டார்.

இது ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்த நிலையில், அதன்பின்பு அவர் பேட்டிங்கில் செய்த மாயஜாலங்கள் தான் சென்னை ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், இந்தப் போட்டியில் ரஹானே பல தரமான சம்பவங்களை செய்துள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் அதிவேகத்தில், அதாவது குறைந்த பந்தில் அரை சதம் அடித்தவர்களில், ரஹானே மூன்றவாது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக,

16 பந்துகள் - சுரேஷ் ரெய்னா vs பஞ்சாப் (2014), 19 பந்துகள் - மொயின் அலி vs ராஜஸ்தான் ராயல்ஸ் (2022) 19 பந்துகள் - ரஹானே vs மும்பை இந்தியன்ஸ் (2023)

இதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக குறைந்த பந்துகளை சந்தித்து அரை சதம் அடித்த வீரர்களிலும் ரஹானே மூன்றவாது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக,

14 - பேட் கம்மின்ஸ் (கே.கே.ஆர் - 2022), 18 - ரிஷப் பந்த் (டெல்லி கேப்பிடல்ஸ் - 2019), 19 - ரஹானே (சென்னை சூப்பர் கிங்ஸ் - 2023)

மேலும் இந்தத் தொடரில் அதிவேகத்தில் அரைசதம் பெற்ற வீரர் என்ற பெருமையையும் ரஹானே பெற்றுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற 16-வது சீசனுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில், அஜிங்கிய ரகானே ரூ.50 லட்சத்துக்கு சென்னை அணியால் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தோனியின் பக்கா ப்ளான்!

காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸும், மொயின் அலியும் இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. சென்னை அணியில் மொயின் அலி மூன்றாவது வீரராக களமிறங்கினார். அவருக்கு பதிலாக யாரை இறங்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அப்பொழுதுதான் தோனி ஒரு ப்ளான் செய்தார். மும்பை மண்ணின் மைந்தனான ரகானேவை டீமில் சேர்ந்ததோடு அவரை மூன்றாவது வீரராகவும் களமிறக்கினார். தோனியின் ப்ளானுக்கு கைமேல் பலன் கிடைத்தது. கான்வே முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்த போதும், அந்த சுவடே தெரியாமல் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்தார் ரகானே. அதுவும் அவரது க்ளாசிக்கான ஆட்டம் அவ்வளவு அற்புதமாக இருந்தது. அதாவது எந்த ஒரு ஸ்வீப் ஷாட் என வித்தியாசமான எதுவும் இல்லை. ஒரு நேர்த்தியான பேட்ஸ்மேனுக்கே உரிய ஷாட்களை மட்டுமே தேர்வு செய்து விளாசினார். 27 பந்துகளில் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனால், சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com