PAK வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. அதுஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்! - சாடிய முன். PAK வீரர்

பாகிஸ்தான் அணிகுறித்து பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியது உண்மையென்றால், சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிpt web
Published on

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவுடனும் கையிலிருந்து போட்டியை கோட்டைவிட்டு தொடரிலிருந்தே வெளியேறியது. பந்துவீச்சில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தினாலும், பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்றன.

பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், ஷாகித் அஃப்ரிடி, கம்ரான் அக்மல் முதலிய வீரர்கள் 2024 டி20 உலகக்கோப்பையில் பாபர் அசாமின் கேப்டன்சி மோசமாக இருந்ததை ஒப்புக்கொண்டனர். அதேநேரம், அணிக்குள் ஒற்றுமை இல்லை என்றும், அணியில் மூன்று குழுக்கள் பிரிந்து இருப்பதாகவும், அதனால் அணித்தேர்வில் மாற்றங்கள் தேவையென்றும், புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டன.

பாகிஸ்தான் - கேரி கிர்ஸ்டன்
பாகிஸ்தான் - கேரி கிர்ஸ்டன்web

இதற்கிடையில் பாகிஸ்தான் அணியின் தற்போதைய பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன், பாகிஸ்தான் அணிக்குள் ஒற்றுமை இல்லாததை கடுமையாக விமர்சித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வைரலாகின.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
தோனியின் வெளியேற்றம் உறுதி? தலைவன் வழியில் "கேப்டன்சி + விக்கெட் கீப்பிங்” செய்யும் ருதுராஜ்! #viral

பாகிஸ்தான் ஒரு அணியே இல்லை...

டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின் படி பாகிஸ்தான் அணி குறித்து பேசியிருக்கும் கேரி கிர்ஸ்டன், “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையே இல்லை. அவர்கள் அதை ஒரு அணி என்று அழைக்கிறார்கள், ஆனால் அதெல்லாம் ஒரு அணியே இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கவில்லை, அனைவரும் தனித்தனியாக பிரிந்திருக்கின்றனர். நான் பயிற்சியாளராக பல அணிகளுடன் வேலை செய்திருக்கிறேன், ஆனால் இதுபோலான ஒரு மோசமான சூழ்நிலையை பார்த்ததில்லை” என்று விளாசியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
’என் பயிற்சியாளர் வாழ்க்கையில் இப்படிஒரு மோசமான அணியை பார்த்ததில்லை..’ PAK-ஐ விளாசிய கேரி கிர்ஸ்டன்!

பாகிஸ்தான் வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

கேரி கிர்ஸ்டன் கூறியது வைரலானதை தொடர்ந்து, ஹர்பஜன் சிங், மைக்கேல் வாகன் முதலிய வீரர்கள் பாகிஸ்தான் அணியை விமர்சித்திருந்தனர்.

அவர்களை தொடர்ந்து தற்போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் அகமது ஷசாத்தும் பாகிஸ்தானை அணியை சாடியுள்ளார்.

தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “பாகிஸ்தான் அணி குறித்து கேரி கிர்ஸ்டன் பேசியது உண்மையாக இருந்தால், அதற்காக அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. ஏனென்றால் இதைத்தான் நாங்கள் உலகக் கோப்பை முழுவதும் கூறி வருகிறோம். இது பொறுப்பு கூறலுக்கான நேரம், இந்த பாகிஸ்தான் அணி ஒருகுழுவாக பாதிக்கப்பட்டுள்ளது, இதை சரிசெய்வதற்கு ஒடுக்குமுறை மட்டுமே ஒரே வழி. இதில் சம்பந்தப்பட்ட வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இதை கவனிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
“PAK உடன் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.. இந்தியாவிற்கு வாருங்கள்”- கேரி கிர்ஸ்டனை அழைத்த ஹர்பஜன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com