AFGvBAN |அரையிறுதி சென்று சாதனை படைக்குமா ஆப்கானிஸ்தான்..?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் மிகமுக்கிய போட்டியாக இது உருவெடுத்திருக்கும் நிலையில், அந்த அணியின் கேப்டனைத் தவிர்த்து வேறு யார் முன்னின்று அணியை வழிநடத்திட முடியும். இதுவரை 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் ரஷீத்.
ரஷீத் கான்
ரஷீத் கான் https://x.com/rashidkhan_19
Published on
போட்டி 52: ஆப்கானிஸ்தான் vs வங்கதேசம்
சூப்பர் 8 பிரிவு: குரூப் 1
போட்டி நடக்கும் மைதானம்: அர்னோஸ் வேல் கிரவுண்ட், கிங்ஸ்டவுன், செயின்ட் வின்சென்ட்
போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 25, இந்திய நேரப்படி அதிகாலை 6 மணி

இந்த உலகக் கோப்பையில் இதுவரை

ஆப்கானிஸ்தான்: போட்டிகள் - 6, வெற்றிகள் - 4, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0
சிறந்த பேட்ஸ்மேன்: ரஹ்மானுல்லா குர்பாஸ் - 6 இன்னிங்ஸ்களில் 238 ரன்கள்
சிறந்த பௌலர்: ஃபசல்ஹக் ஃபரூக்கி - 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்
அமர்க்களமாக இந்த உலகக் கோப்பையில் விளையாடிக்கொண்டிருக்கிறது ஆப்கானிஸ்தான். லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தி அவர்களை வெளியே அனுப்பிவிட்டு சூப்பர் 8 சுற்றில் அவர்களின் இடத்தை உரித்தாக்கியது ரஷீக் கானின் அணி. 4 லீக் சுற்றுப் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒன்றில் மட்டுமே தோற்றது அந்த அணி. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோற்றிருந்தாலும், அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. முதலில் பேட்டிங் செய்து 148 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான், மிகச் சிறப்பாகப் பந்துவீசி ஆஸ்திரேலியாவை 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது. இதன்மூலம் 50 ஓவர் உலகக் கோப்பையில் அடைந்த அந்த வரலாற்றுப் போட்டியின் தோல்விக்குப் பழிதீர்த்துக்கொண்டது.

ரஷீத் கான்
INDvAUS | அரையிறுதிக்குள் நுழையுமா ஆஸ்திரேலியா..?

வங்கதேசம்: போட்டிகள் - 6, வெற்றிகள் - 3, தோல்விகள் - 3, முடிவு இல்லை - 0
சிறந்த பேட்ஸ்மேன்: தௌஹித் ஹிரதோய் - 6 போட்டிகளில் 139 ரன்கள்
சிறந்த பௌலர்: தன்சிம் ஹசன் சகிப் - 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகள்
இந்த உலகக் கோப்பையில் தங்கள் முதல் போட்டியிலேயே இலங்கையை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கான கதவுகளைத் திறந்தது வங்கதேசம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மட்டும் லீக் சுற்றில் தோற்ற அந்த அணி, சூப்பர் 8 சுற்றில் இதுவரை மோதியிருக்கும் இரண்டு போட்டிகளிலுமே தோற்றிருக்கிறது.

இந்தப் போட்டியின் முடிவும், அரையிறுதி வாய்ப்பும்:

இந்தப் போட்டியின் முடிவு இந்த குரூப்பில் இருந்து எந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதைத் தீர்மானிக்கும். இதற்கு முன்பே இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி முடிந்துவிடும் என்பதால், இரு அணிகளுக்கும் என்ன வாய்ப்பு என்பது போட்டி தொடங்குவதற்கு முன்பே தெளிவாகத் தெரிந்துவிடும். இந்திய அணி நல்ல ரன்ரேட் வைத்திருப்பதால் அந்த அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்றாலும் அரையிறுதிக்கு முன்னேறிடும். மற்ற அணிகளின் தலையெழுத்து எப்படி இந்தப் போட்டியால் தீர்மானமாகும் என்று பார்ப்பும்.

ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால்

ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தானுக்கு ரன்ரேட் மிகமுக்கியமாக இருக்கும். அதனால் அந்த அணி மிகப் பெரிய வெற்றி பெறவேண்டிவரும். ஆஸ்திரேலியா தோற்று ஆப்கானிஸ்தான் வென்றாலே, ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

வங்கதேசம் வெற்றி பெற்றால்

வங்கதேச அணி வெற்றி பெற்றால் அது ஆஸ்திரேலியாவின் பாதையை எளிதாக்கிடும். ஆஸ்திரேலியா பெரும் தோல்வி அடைந்து வங்கதேசம் இமாலய வெற்றி பெற்றால் தான் வங்கதேசம் அரையிறுதி வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியும்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரான், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கரீம் ஜனத், குல்பதின் நைப், முகமது நபி, நாங்கயிலா கரோடே, ரஷீத் கான் (கேப்டன்), நூர் அஹமது, நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.

வங்கதேசம்: லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (கேப்டன்), தௌஹித் ஹிரதோய், ஷகிப் அல் ஹசன், மஹமதுல்லா, ஜாகெர் அலி, ரிஷாத் ஹொசைன், மஹெதி ஹசன், தன்சிம் ஹசன் சகிப்.

கவனிக்கவேண்டிய வீரர்கள்

ஆப்கானிஸ்தான் - ரஷீத் கான்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் மிகமுக்கிய போட்டியாக இது உருவெடுத்திருக்கும் நிலையில், அந்த அணியின் கேப்டனைத் தவிர்த்து வேறு யார் முன்னின்று அணியை வழிநடத்திட முடியும். இதுவரை 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் ரஷீத்.

வங்கதேசம் - முஸ்தாஃபிசுர் ரஹ்மான்: ஆப்கானிஸ்தான் பேட்டிங்குக்கு குர்பாஸ் மிகமுக்கிய அங்கமாக இருப்பார் என்பதால், முஸ்தாஃபிசுரை வங்கதேச அணி பவர்பிளேவிலேயெ பயன்படுத்தி குர்பாஸ் விக்கெட்டை வீழ்த்த முயற்சிக்கவேண்டும்.

கணிப்பு: ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தங்கள் அரையிறுதி வாய்ப்பை அதிகப்படுத்தும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com