தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி இன்னொரு ஷாக் கொடுக்குமா ஆப்கானிஸ்தான்; யார் வென்றாலும் அது புது வரலாறுதான்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் ஆஃப்கானிஸ்தான் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் நிலையில், இரு அணிகளின் பலம் பலவீனம், இதற்கு முந்தைய செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி
afg vs sa
afg vs sapt web
Published on

அரையிறுதி 1: ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா

போட்டி நடக்கும் மைதானம்: பிரயன் லாரா ஸ்டேடியம், டரூபா, டிரினிடாட்

போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 27, இந்திய நேரப்படி அதிகாலை 6 மணி

இந்த உலகக் கோப்பையில் இதுவரை

ஆப்கானிஸ்தான்:

போட்டிகள் - 7, வெற்றிகள் - 5, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0

சிறந்த பேட்ஸ்மேன்: ரஹ்மானுல்லா குர்பாஸ் - 7 போட்டிகளில் 281 ரன்கள்

சிறந்த பௌலர்: ஃபசல்ஹக் ஃபரூக்கி - 7 போட்டிகளில் 16 விக்கெட்டுகள்

லீக் சுற்றில் நியூசிலாந்து, பாபுவா நியூ கினியா, உகாண்டா ஆகிய அணிகளை அடித்துத் துவைத்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான். முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகத் தோற்றிருந்தாலும் அதன்பிறகு சிறப்பாக கம்பேக் கொடுத்து ஆஸ்திரேலியாவையும் வங்கதேசத்தையும் வீழ்த்தியது ரஷீத் கான் அண்ட் கோ. அதன்மூலம் முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் அரையிறுதிக்கும் நுழைந்திருக்கிறது.

afg vs sa
கேரளா | திடீரென அறுந்து விழுந்த மிடில் பர்த்.. கழுத்து எலும்பு உடைந்து பயணி பரிதாப மரணம்!

தென்னாப்பிரிக்கா

போட்டிகள் - 7, வெற்றிகள் - 7, தோல்விகள் - 0, முடிவு இல்லை - 0

சிறந்த பேட்ஸ்மேன்: குவின்டன் டி காக் - 7 போட்டிகளில் 199 ரன்கள்

சிறந்த பௌலர்: ஆன்ரிக் நார்கியா - 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகள்

இந்த உலகக் கோப்பையில் தோல்வியின் ருசி அறியாத ஒரே அணி தென்னாப்பிரிக்கா மட்டும்தான். விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. ஒருசில போட்டிகளில் கடைசி வரை போராடவேண்டியதாக இருந்தாலும், எப்படியோ அந்த வெற்றியை வசப்படுத்தியிருக்கிறது தென்னாப்பிரிக்கா.

பலம் & பலவீனம்

இந்த இரண்டு அணிகளுக்குமே பேட்டிங்கில் வேறு வேறு விதமான பிரச்னைகள் இருக்கின்றன. தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஸ்கோரர் டி காக் எனும்போது, இன்னொரு ஓப்பனர் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் அநியாயத்துக்கும் சொதப்புகிறார். 80 என்ற ஸ்டிரைக் ரேட்டில் மொத்தமே 80 ரன்கள் தான் அடித்திருக்கிறார் அவர். அடுத்து வரும் கேப்டன் எய்டன் மார்க்ரமும் சரியாக ஆடுவதில்லை. 7 போட்டிகளில் 96 ரன்கள் தான் அடித்திருக்கிறார் தென்னாப்பிரிக்க கேப்டன். அந்த டாப் ஆர்டர் சொதப்பலை மில்லர், கிளாசன், ஸ்டப்ஸ் அடங்கிய மிடில் ஆர்டர் தான் சமாளித்துக்கொண்டிருக்கிறது.

afg vs sa
"லாராவின் நம்பிக்கையை பொய்யாக்கமாட்டோம் என்று கூறியிருந்தேன்" - ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்

ஆப்கானிஸ்தான் அணிக்கு சிக்கல் வேறு மாதிரி இருக்கிறது. ஓப்பனர் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான் இருவருமே 200+ ரன்கள் அடித்திருக்கிறார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் யாரும் நிலைத்து நின்று ஆடுவதில்லை. ஓப்பனர்களின் செயல்பாடுகளை வைத்தே தேறிக்கொண்டிருக்கிறது அந்த அணி.

rashid Khan
rashid KhanPTI

பந்துவீச்சைப் பொறுத்தவரை இரு அணிகளுமே மிரட்டலாக செயல்பட்டுவருகின்றன. பரூக்கி 16 விக்கெட்டுகளுடன் உலகக் கோப்பையிலேயே டாப் விக்கெட் டேக்கராக இருக்கிறார். ரஷீத் கான் 14, நவீன் உல் ஹக் 13 என அவர்களும் தங்கள் பங்குக்கு விக்கெட் வேட்டை நடத்துகிறார்கள். தென்னாப்பிரிக்க அணியில் ஒவ்வொரு பௌலருமே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் விக்கெட் வேட்டை நடத்துகிறார்கள். யான்சன் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை என்றாலும், பவர்பிளேவில் சிக்கனமாகப் பந்துவீசுகிறார்.

இப்படி இரு அணிகளின் பந்துவீச்சும் சிறப்பாக இருப்பதால், எந்த அணியின் பேட்டிங் நன்றாக செயல்படுகிறதோ, அந்த அணியே இறுதிப் போட்டிக்குள் நுழையும். தென்னாப்பிரிக்க அணி நல்ல தொடக்கம் பெற இந்தப் போட்டியிலாவது ரயான் ரிக்கில்டனைக் களமிறக்கவேண்டும்.

afg vs sa
T20 WC: ஆஸ்திரேலியாவின் கனவை தகர்த்து வரலாற்று சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் - ரசிகர்கள் கொண்டாட்டம்

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரான், அஸ்மத்துல்லா ஓமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, கரிம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நாஞ்சயலியா கரோடே, நூர் அஹமது, நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.

தென்னாப்பிரிக்கா: குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரயான் ரிக்கில்டன், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹெய்ன்ரிக் கிளாசன், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ யான்சன், கேஷவ் மஹாராஜ், தப்ராய்ஸ் ஷம்ஸி, ககிஸோ ரபாடா, ஆன்ரிக் நார்கியா.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

ஆப்கானிஸ்தான் - ரஹ்மானுல்லா குர்பாஸ்: மொத்த மிடில் ஆர்டரும் சொதப்பிக்கொண்டிருக்கும் நிலையில், குர்பாஸ் மீது அதீத பொறுப்புகளும் நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது. அவர் எவ்வளவு நல்ல தொடக்கம் கொடுக்கிறாரோ அந்த அளவுக்கு நல்ல ஸ்கோரை ஆப்கானிஸ்தான் எடுக்கும்.

தென்னாப்பிரிக்கா - ஹெய்ன்ரிக் கிளாசன்: ஆப்கானிஸ்தானின் மிரட்டல் ஸ்பின் யூனிட்டை சமாளிக்க கிளாசன் போன்ற ஒருவரால் தான் முடியும். அவர் மீதும் மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

தென்னாப்ரிக்க அணி இதுவரை 7 முறை உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், 7 முறையும் தோல்வியையே சந்தித்துள்ளது. அதேபோல், ஆப்கானிஸ்தான் அணி தற்போதுதான் முதல்முறையாக அரையிறுதிப் போட்டிக்கே முன்னேறி உள்ளது. அதனால், இரு அணிகளில் யார் இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலும் அது அவர்களுக்கு புதிய வரலாறுதான்.

afg vs sa
"கரீபிய தீவுகளில் மீண்டும் ரசிகர்கள் கிரிக்கெட்டை காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்" - ரோவ்மன் பவெல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com