அந்த எமோசன்.. அந்த வெறி! 2023 ODI WC-ல் ஏற்பட்ட வலி! 2024-ல் ஆஸியை பழிதீர்த்து ஆப்கானிஸ்தான் வரலாறு!

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் கேட்ச்சை கோட்டைவிட்டது, மோசமான ஃபீல்டிங் போன்ற காரணங்களால் கையிலிருந்த போட்டியை கோட்டைவிட்ட ஆப்கானிஸ்தான், இந்தமுறை ஃபீல்டிங், பவுலிங், பேட்டிங்க் மூன்றிலும் ஆஸ்திரேலியாவை டாமினேட் செய்து வரலாறு படைத்துள்ளது.
aus vs afg
aus vs afgweb
Published on

2023 உலகக்கோப்பையில் ஏற்பட்ட தீராத வலி!

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, அரையிறுதி செல்லும் வாய்ப்பில் 100% உயிர்ப்புடன் இருந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் 291 ரன்களை குவித்த ஆப்கான் அணி, இரண்டாவது பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவை 91 ரன்னுக்கு 7 விக்கெட்டுகள் என சாய்த்து ஒரு மாபெரும் கனவோடு களத்தில் இருந்தது.

maxwell
maxwell

அதுவரை ஆப்கானிஸ்தான் கையிலிருந்த போட்டியை மேக்ஸ்வெல் ஒரு பேட்ஸ்மேன் மட்டும் தனியாக தட்டிப்பறித்தார். 91/7 என்ற நிலையிலிருந்த போட்டி 293/7 என மாறி ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேக்ஸ்வெல்லுக்கு எதிராக கேட்ச் விட்டது, மோசமான ஃபீல்டிங், அழுத்தமான நேரத்தில் எப்படி பந்துவீசுவது என்று தெரியாதது என அனைத்தும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சென்றது. போதாக்குறைக்கு மேக்ஸ்வெல் இரட்டை சதமடித்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார்.

maxwell
maxwell

ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்களின் கண்கள் சோர்ந்து போயின, வீரர்கள் செய்வதறியாது தவித்து போயினர். அந்த தோல்வி அவர்களுக்கு ஆறாத வலியை தந்தது என்று தான் சொல்லவேண்டும். அன்று 2023 ஒருநாள் உலகக்க்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இழந்த போட்டியை, 20234 டி20 உலகக்கோப்பையில் வென்று ஆப்கானிஸ்தான் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

aus vs afg
‘இதுக்கு ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து கிட்ட தோத்தே போயிருக்கலாம்’! WI-க்கு மரண அடி கொடுத்து வென்ற ENG!

பக்கா பிளானோடு வந்த ஆப்கானிஸ்தான்..

2024 டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணி பலப்பரீட்சை நடத்தியது. உண்மையில் இந்த போட்டிக்காக ஆஸ்திரேலியா எந்தவிதமான பிளானும் செய்யாமல் வந்தது போல தான் இருந்தது, ஆனால் ஆப்கானிஸ்தான் அணியோ வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடிப்பட்ட புலிபோல அனைத்துவிதமான பிளானுடன் களத்திற்குள் நுழைந்தது.

குர்பாஸ்
குர்பாஸ்

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வுசெய்து தவறுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 160-170 ரன்கள் அடித்தால் போதும், மீதியை பவுலிங்கில் பார்த்துக்கொள்ளலாம் என்ற திட்டத்தோடுதான் களத்திற்கு வந்தது. அதற்கேற்றார் போல் தொடக்கவீரர்கள் குர்பாஸ் மற்றும் ஜத்ரான் இருவரும் நிலைத்து நின்று விளையாடினாலும், ஆஸ்திரேலியா அணி ரன்களை விட்டுக்கொடுக்காமல் டைட்டாகவே பந்துவீசியது.

aus vs afg
aus vs afg

ஆனால் மோசமான பீல்டிங்கின் காரணமாக மிடில் ஓவர்களில் ரன்களை விட்டுக்கொடுத்த ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானை 148 ரன்களுக்கு வழிவகுத்தது. பாட் கம்மின்ஸ் இந்த போட்டியிலும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

aus vs afg
‘இதனால்தான் கோலியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை’ - முக்கியமான காரணத்தை பகிர்ந்த முன்னாள் வீரர்!

ஆஸியை வீழ்த்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்!

149 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட வந்த ஆஸ்திரேலியா அணிக்கு நவீன் உல் ஹக், ஒரு அற்புதமான அவுட் ஸ்விங் டெலிவரி மூலம் டிராவிஸ் ஹெட்டின் ஸ்டம்பை தகர்த்தெறிந்து 0 ரன்னில் வெளியேற்றியதோடு, கேப்டன் மிட்செல் மார்ஸையும் 12 ரன்னில் பெவிலியன் அனுப்பினார். டேவிட் வார்னரை நபி 3 ரன்னில் வெளியேற்ற, 32 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

ஹெட்
ஹெட்

ஆனால் அதற்குபிறகு கைக்கோர்த்த க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டொய்னிஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் போட, பிட்ச்சில் பந்து நின்றுவருவதை பார்த்த கேப்டன் ரசீத் கான் பந்தை குல்பதின் நைப் கையில் கொடுத்தார். அந்த ஒரு ஸ்டெப் தான் ஆப்கானிஸ்தான் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துவந்தது.

நைப்
நைப்

அபாரமாக பந்துவீசிய நைப் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், பாட் கம்மின்ஸ், க்ளென் மேக்ஸ்வெல் என 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியை ஆப்கானிஸ்தான்பக்கம் கொண்டுவந்தார். மேக்ஸ்வெல் தனியொரு ஆளாக 59 ரன்கள் அடித்து போராடினாலும், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்திலும் ஜொலித்த ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்த இந்தமுறை தப்ப முடியவில்லை.

முடிவில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான். சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் வீழ்த்துவது இதுவே முதல்முறை. பந்துவீச்சு பயிற்சியாளர் டிவெய்ன் பிராவோ போட்டிமுடியும் வரை களத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டார், ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் டக் அவுட் மற்றும் வீரர்கள் அனைவரும் இந்த வெற்றிக்காக காத்திருந்து கொண்டாடித்தீர்த்தனர். வாழ்த்துக்கள் ஆப்கானிஸ்தான்!

aus vs afg
0 தோல்வி.. வரிசையாக 6 வெற்றி! இருப்பினும் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் SA! வில்லனாக மாறிய WI!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com