2வது T20I போட்டியிலேயே 46 பந்தில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா! ஜிம்பாப்வேவை பொளந்து கட்டிய இந்திய அணி

ஜிம்பாப்வேக்கு எதிரான தனது இரண்டவாது டி20 போட்டியிலேயே அதிரடியாக சதம் விளாசி அசத்தியுள்ளார் அபிஷேக் சர்மா..
அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மாpt web
Published on

2 ரன்களில் வெளியேறிய கில்

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இரண்டவாது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் 2 ரன்களிலேயே வெளியேறினார். கடந்த போட்டியில் சோபிக்கத் தவறிய அபிஷேக் சர்மா, தனது ஐபிஎல் பாணியிலான ஆட்டத்திற்கு திரும்பினார். ருத்துராஜ் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, அபிஷேக் சர்மா முதலில் நிதானமாக தொடங்கினாலும், பின்னர் நாலாப்புறமும் பந்துகளை சிதறடித்தார். 11 ஆவது ஓவரில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு சிக்சர்கள், மூன்று பவுண்டரிகள் என 26 ரன்களை சேர்த்திருந்தார் அபிஷேக் சர்மா.

அபிஷேக் சர்மா
'MI' BACK TO FORM! அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கவுரவிக்கப்பட்ட ரோகித், ஹர்திக், SKY! #ViralVideo

அபிஷேக் சர்மா அதிரடி சதம்

33 ஆவது பந்தில் அரைசதம் கடந்த அவர், அடுத்த 13 பந்துகளிலேயே அதாவது 46 ஆவது பந்தில் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்த நிலையில் சதத்தினை அடைந்தார். 47 பந்துகளில், 8 சிக்சர்கள், 7 பவுண்டரிகளை விளாசி 100 ரன்களை அடித்து வெளியேறினார் அபிஷேக்.

முதல் போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றிய அபிஷேக் சர்மா, தனது இரண்டாவது சர்வதேச டி20 போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்தியாவிற்காக சர்வதேச டி20 போட்டியில் குறைந்த இன்னிங்ஸ்களை மட்டுமே விளையாடி சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் அபிஷேக். தீபக் ஹூடா தனது மூன்றாவது இன்னிங்ஸிலும், கே எல் ராகுல் தனது நான்காவது இன்னிங்ஸிலும் தனது சதத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் களத்தில் இருந்தவரை நிதானமாக, அவருக்கு ஸ்ட்ரைக் கொடுத்து ஆடிய ருதுராஜ், பின் தனது அதிரடியைக் காட்டினார். 38 ஆவது பந்தில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்த ருத்துராஜ், 18 ஆவது ஓவரில் மட்டும் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்சரை விளாசினார்.

ரிங்கு சிங்கும் தனது பங்கிற்கு அதிரடி காட்டி சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால் இந்திய அணி இருபது ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 234 ரன்களைக் குவித்தது. ருதுராஜ் 47 பந்துகளில் 77 ரன்களுடனும், ரிங்கு சிங்22 பந்துகளில் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இமாலய இலக்கை நிர்ணயித்ததன் மூலம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது. 235 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடி வரும் ஜிம்பாப்வே அணி 10.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 73 ரன்களுக்கு ஆடிவருகிறது.

இந்திய அணியும் முதல் 10 ஓவர்களில் 74 ரன்கள் தான் எடுத்திருந்தது. அடுத்த 10 ஓவர்களில் தான் 160 ரன்கள் குவித்தது. 12 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

அபிஷேக் சர்மா
HBD DHONI | முடிசூடா மன்னன்.. என்றும் ராஜாதிராஜா... தோனியின் முறியடிக்கப்படாத சாதனைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com