130 ரன்களே இலக்கு.. அஸ்வின், ஜடேஜாவை வைத்து சம்பவம் செய்த தோனி! 2013 vs 2024 - கடைசி 5 ஓவர் மேஜிக்!

2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியை வென்ற நிலையில், நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை இந்திய அணி வென்ற நிலையில் ரசிகர்கள் ஒப்பீடு செய்து வருகின்றனர்.
தோனி, ரோகித்
தோனி, ரோகித்pt web
Published on

தோனி

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி டி20 உலகக் கோப்பையை தன்வசம் ஆக்கியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. எப்போதும், இந்திய அணிக்கோ அல்லது இந்திய அணியிலோ என்ன நடந்தாலும் சரி, ரசிகர்கள் எப்போதும் ஒருவரது பெயரை நினைவு கூறுவார்கள். “அவர் காலத்துல...., இப்ப மட்டும் அவர் இருந்திருந்தார்ன்னா...?” என ஆரம்பிப்பார்கள். அவர் என்பவர் தோனி...

இப்போதும் தோனியுடனும், அவர் வென்ற கோப்பைகளுடன், தற்போது சாம்பியன் ஆன இந்திய அணியை ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். தென்னாப்ரிக்க இன்னிங்ஸின் 15 ஆவது ஓவரில், கிட்டத்தட்ட ஆட்டம் கைமீறிப் போய்விட்டதாகவே எல்லோரும் நினைத்தார்கள். அப்போது தென்னாப்ரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது 87% ஆக இருந்தது. அதன்பிறகே சில திடீர் வாய்ப்புகள் கிடைத்து, அதை இந்திய அணி கச்சிதமாக கைப்பற்றி கோப்பையை தன்வசமாக்கியது.

நடந்து முடிந்த போட்டியிலாவது, 15 ஆவது ஓவரில்தான் ஆட்டம் கைமீறிப் போய்விட்டதோ என்ற எண்ணம் வந்தது. ஆனால், 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆட்டத்தை இந்திய அணி வெல்லும் என்ற நம்பிக்கையை கடைசிவரை கொண்டிருந்த இந்திய ரசிகர்கள் அரிதினும் அரிதே.

தோனி, ரோகித்
சவால்களை சமாளித்து ஜொலித்த டாப் 10 பேட்டர்கள்!

2013 சாம்பியன்ஸ் டிராபி

மழை காரணமாக போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியோ, 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்களையும், ஜடேஜா 33 ரன்களையும் எடுத்திருந்தனர். கட்டுக்கோப்பாக பந்துவீசிய இங்கிலாந்து அணியில் ரவி போபாரா 4 ஓவர்களில் 1 மெய்டென்னுடன் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, தவான், ரெய்னா, தோனி என முக்கியமான விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

130 ரன்களை எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறும் என்ற நிலை. எதிரணியில், குக், ஜோ ரூட், பட்லர், மார்கன் என நட்சத்திர பட்டாளம் இருக்கிறது. 129 ரன்களுக்குள் சுருட்டித்தான் ஆக வேண்டும். எதிரணியில் யார் ஆடினாலும் நம்முடன் இருப்பது தோனி அல்லவா? இருந்தாலும், இந்திய அணி வெல்லும் என்ற நம்பிக்கைகள் எல்லாம் காற்றோடு பறந்து கொண்டிருந்தன.

தோனி, ரோகித்
ராகுல் டிராவிட்டிற்கு மீண்டும் பதவி வழங்கப்படாதது ஏன்?.. பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

ஆட்டத்தை கட்டுக்குள்ளேயே வைத்திருந்த தோனி

இரண்டவது ஓவரிலேயே கேப்டன் குக் தனது விக்கெட்டை உமேஷ் யாதவிடம் பறிகொடுக்க இங்கிலாந்து அணி 2 ஓவர்களில் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் பந்துகளில் சற்றே ரன்கள் சென்றதும் உடனடியாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவைக் கொண்டுவந்தார் தோனி. இரு ஓவர்களில் தலா 3 ரன்கள் மட்டுமே. அதிலும் அஸ்வின் ஓவரில் ட்ராட் விக்கெட் வேறு விழுந்தது. மீண்டும் வந்த அஸ்வின் ரூட்டையும் கழற்றிவிட்டார். மீண்டும் 10 ஆவது ஓவரை வீசிய அஸ்வின் மெய்டன் ஆக்கினார். முதல் 10 ஓவர்களில் 3 ஓவர்களை வீசிய அஸ்வின் மொத்தமாக 6 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு மெய்டென் ஓவரை வீசி 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு இங்கிலாந்திடம் சற்றே அடிவாங்கியது. இதன் காரணமாக 12 ஆவது ஓவரை ரெய்னா வீசினார். ரெய்னா தன் பங்கிற்கு மூன்று ஓவர்களை வீசிய நிலையில் 19 ரன்களை விட்டுக்கொடுத்தார். பந்துகளுக்கு 1 ரன் அதிகம்.. பாதகமில்லை. 15 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 82 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது.

தோனி, ரோகித்
கோப்பையை உறுதிப்படுத்திய அசாத்திய கேட்ச்.. ஏழு விநாடிகளில் மாறிய வரலாறு!

இந்திய சுழலில் சுருண்ட இங்கிலாந்து

18 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 2 வைட்களை இஷாந்த் சர்மா வீச அனைவருக்கும் பதற்றம் ஆனது. ஆனால் அனைத்திற்கும் அடுத்தடுத்த பந்துகளிலேயே கைமேல் பலன் கிடைத்தன. தொடர்ச்சியாக 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் இஷாந்த் சர்மா. அதுவரை அடித்து ஆடிய மோர்கன், போபாரா இருவரையும் வெளியேற்றினார். ஏனெனில், எஞ்சி இருந்தது இரண்டு ஓவர்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் அடிவாங்கிய நிலையில், தோனி அஸ்வின் மற்றும் ஜடேஜாவை மட்டுமே கொண்டு வருவார் என்பது தெரிந்தது. அடிக்க வேண்டுமானால் 18 ஆவது ஓவரை வீசிய இஷாந்த் ஓவரில் அடித்தால்தான் உண்டு. அடிக்க முயற்சித்தனர்.. தோனியின் மாஸ்டர் ப்ளானில் முயற்சி வீணானது. விழுந்தது 2 விக்கெட்கள்.

19 ஆவது ஓவரை ஜடேஜா வீச, 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். கடைசி ஓவரில் அஸ்வின் என்ற அஸ்திரத்தை கொண்டு வந்தார் தோனி. அதுவரை அஸ்வின் 3 ஓவர்களை வீசி, மொத்தமாக 6 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு ஓவரை மெய்டெனாக வீசி 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார். இறுதி ஓவரில் 15 ரன்கள் வேண்டும் என்ற நிலை. அசத்தலாக வீசிய அஸ்வின் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனி, ரோகித்
டி20 உலகக் கோப்பை... இடைவெளி மாற்றமும், ஃபார்மட் மாற்றமும் ஏன்?

ஆட்டத்தை மாற்றிய இஷாந்த்

மோர்கன் மற்றும் போபாரா களத்தில் இருந்த வரை இங்கிலாந்து அணியில் கட்டுப்பாட்டில் ஆட்டம் இருந்தது. ஆனால், அந்த இஷாந்த் ஓவரில் கிடைத்த அந்த இரண்டு விக்கெட் ஆட்டத்தையே மாற்றியது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு கைகொடுத்தது வேகப்பந்து வீச்சாளர்கள் தான். சுழற்பந்து வீச்சாளர் ட்ரெட்வெல் 4 ஓவர்களை வீசி இருந்தாலும், விக்கெட் இழப்பின்றி 25 ரன்களைக் கொடுத்திருந்தார். ஆனால் இந்திய அணிக்கு கைகொடுத்தது சுழற்பந்துவீச்சு மட்டுமே. ஜடேஜா 4 ஓவர்களில் 24 ரன்களையும் அஸ்வின் 4 ஓவர்களில் 15 ரன்களையும் கொடுத்து தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

இப்போது அப்படியே நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையையும் பார்க்கலாம். சுழற்பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. கிளாசன் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸர்களாக பறக்கவிட்டார். அக்ஸர் வீசிய 15 ஆவது ஓவரில் மட்டும் கிளாசன் அதிரடியாக விளையாடி 24 ரன்கள் சேர்த்தார். ஆனால், தென்னாப்ரிக்க அணியின் ரன்வேட்டையை இரும்புக் கரம்கொண்டு அடக்கினார் பும்ரா.

தோனி, ரோகித்
இத்தனை கோப்பைகளுக்கு கோலி மட்டும்தான் சொந்தக்காரர்... தோனி, யுவராஜ் கூட படைக்காத சாதனை

செக் வைத்த பும்ரா

16 ஆவது ஓவரை வீசிய பும்ரா வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நெருக்கடியை கூட்டினார். 24 பந்துகளுக்கு 26 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட திக் திக் நிமிடத்தில் ஹர்திக் பாண்டியா வீசிய வைடு யார்க்கரை தொட்ட கிளாசன் பந்த்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதற்கு பும்ரா வீசிய முந்தைய ஓவரின் பதற்றமே காரணம் எனலாம்.

அதன்பிறகும் தென்னாப்பிரிக்க அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. அந்த ஓவரிலும் 4 ரன்களை சேர்த்தது தென்னாப்பிரிக்கா. 18-ஆவது ஓவரை பும்ரா வீச, முதல் 2 பந்துகளில் ரன் எடுக்க முடியாமல் திணறினார் மில்லர். அவரது பேட்டிங்கில் பயமும் பதற்றமும் தெரிந்தது. 3 ஆவது பந்தில் அவர் சிங்கிள் எடுக்க, பும்ராவின் வேகத்தில் யான்சென் கிளீன் போல்ட் ஆனார்.

அதன் பிறகு வந்த மகாராஜ், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தது பெரிய தவறாக பார்க்க தோன்றியது. முக்கியமான 19-ஆவது ஓவரில் முதல் 2 பந்துகளில் மகாராஜ் ரன் எதையும் எடுக்கவில்லை. வெற்றிக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரில் தென்னாப்பிரிக்கா வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தோனி, ரோகித்
கபில், ஸ்ரீசாந்த், SKY.. 3 கேட்ச்களால் வசமான 3 உலகக்கோப்பைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்!

பரபரப்பான சினிமா படம்

கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீச தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது. மழையும் தூரல் விழுத் தொடங்கியது. ஃபுல் டாஸாக விழுந்த முதல் பந்தை மில்லர் நேராக விளாசினார். சிக்ஸர் லைன் எட்டவிருந்த அந்த பந்தை சிறப்பாக கேட்ச் பிடித்து அசத்தினார் சூர்யகுமார். அப்போதே தென்னாப்பிரிக்கா அணியின் உலகக் கோப்பை வெல்லும் கனவு தகர்ந்தது. ஓவர் முடிவில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவுக்கு மீண்டும் துரதிர்ஷ்ட அணி என்ற பெயரை வழங்கியது இந்தியா.

சாம்பியன்ஸ் டிராபியில் முதலில் இருந்தே வெற்றி வாய்ப்பு இங்கிலாந்து பக்கம் இருந்தது எனும் சூழலில், அதைத் திட்டம்போட்டு இந்தியா பக்கம் கொண்டுவந்தார் தோனி. பவர்ப்ளேவில் 2 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்களிடம் கொடுத்து இங்கிலாந்தின் நெருக்கடியை உருவாக்கியது, வேகப்பந்து வீச்சு அடிவாங்கியதும் ரெய்னாவை 3 ஓவர்கள் வீச வைத்தது, கடைசி இரு ஓவர்களை மீண்டும் சுழற்பந்து வீச்சாளர்களிடம் வழங்கியது என சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், நடந்து முடிந்த உலகக்கோப்பையில் இந்தியா பக்கம் இருந்த ஆட்டம், க்ளாசன் வந்தபின் வேகமாக தென்னாப்ரிக்க வசம் சென்றது. ஆனால், ஒரு வாய்ப்பு கிடைத்ததும் அதைக் கச்சிதமாக பிடித்துக் கொண்டார் கேப்டன் ரோகித் சர்மா. இறுதியில் வெற்றி இந்தியா வசம் ஆனது. இரண்டு போட்டிகளும் பரபரப்பான சினிமா படமே.

தோனி, ரோகித்
இந்த தலைமுறையின் மிகச் சிறந்த பௌலர் ’ஜஸ்ப்ரித் பும்ரா’! T20WC தொடரின் நாயகன்.. தேசத்தின் நாயகன்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com