ரிஷப் பண்ட்டை தூக்க பக்கா பிளான்.. 17 வயது தொடக்க வீரரை குறிவைத்த தோனி! CSK-வின் ஸ்மார்ட் மூவ்!

மெகா ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக மும்பையை சேர்ந்த 17வயது தொடக்கவீரர் மீது தோனியின் பார்வை விழுந்துள்ளதாகவும், அவரை சிஎஸ்கேவில் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பண்ட் - ஆயுஷ் மத்ரே
பண்ட் - ஆயுஷ் மத்ரேweb
Published on

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலாம் நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடத்தப்படவிருக்கின்றன. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், எந்த அணி எந்த வீரர்களுக்கு ஏலத்திற்கு செல்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு தற்போதே எகிறியுள்ளது.

சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மாதீஷா பத்திரனா, ஷிவம் துபே மற்றும் தோனி ஆகியோரைத் தக்கவைத்துக்கொண்டு, 55 கோடி ரூபாய் பர்ஸுடன் மெகா ஏலத்தில் நுழைகிறது.

ஆர்சிபி, சிஎஸ்கே
ஆர்சிபி, சிஎஸ்கேட்விட்டர்

இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனிக்கு மாற்றுவீரராக ரிஷப் பண்ட்டை குறிவைத்திருக்கும் சிஎஸ்கே அணி, தொடக்கவீரர் ஸ்லாட்டை அதிகவிலைக்கு செல்லாமல் 17 வயது வீரரை கொண்டு முடித்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. டெவான் கான்வே, ரச்சின் ரவிந்திரா தக்கவைக்கும் இடத்தில் இருந்தாலும், மறுபுறம் 17வயது மும்பை வீரரை பயிற்சிக்கு தோனி அழைத்திருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

பண்ட் - ஆயுஷ் மத்ரே
IPL 2025: மிட்செல் ஸ்டார்க்கை குறிவைக்கும் 5 அணிகள்.. மீண்டும் மிகப்பெரிய தொகைக்கு செல்ல வாய்ப்பு!

தோனியை கவர்ந்த 17 வயது தொடக்க வீரர்..

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மத்ரே, தனது அபாரமான பேட்டிங் திறமையால் டோனியின் மனம் கவர்ந்த வீரராக மாறியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆயுஷ் மத்ரே தனது கிரிக்கெட் கரியரை தொடங்கி உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் தனது முதல் 5 ஆட்டங்களில் 321 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 176 ரன்கள் விளாசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஆயுஷ் மத்ரே, சென்னை அணி சார்பில் பயிற்சி போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக டைம் ஆஃப் இந்தியா மேற்கோள் காட்டியுள்ளது.

ஆயுஷ் மத்ரே
ஆயுஷ் மத்ரே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மின்னஞ்சல் மூலம் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் ஆயுஷ் மத்ரேவை பயிற்சி ஆட்டங்களில் விளையாட அனுமதிக்குமாறு கேட்டுஉள்ளதாகவும், அதற்கு அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஞ்சி டிராபி 2024 சீசனின் ஐந்தாவது சுற்று நவம்பர் 16 அன்று முடிவடைவதை தொடர்ந்து, சையத் முஷ்டாக் அலி டிராபி தொடங்குவதற்கு முன்பு ஆறு நாள் இடைவெளியில் தோனியின் கீழ் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.

ஒருவேளை சிஎஸ்கே அணி அவரை தொடக்கவீரராக தேர்ந்தெடுத்தால் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஓப்பனிங் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பண்ட் - ஆயுஷ் மத்ரே
IPL 2025|ஜோஸ் பட்லர் முதல் ஃபிலிப் சால்ட் வரை.. மிகப்பெரிய தொகைக்கு போகவிருக்கும் 5 தொடக்க வீரர்கள்!

17 வயது வீரருக்கும், ரிஷப் பண்ட்டின் தேர்வுக்கும் என்ன தொடர்பு?

டெவான் கான்வே, ரச்சின் ரவிந்திரா போன்ற சிறந்த வீரர்கள் தொடக்கவீரர்கள் ஸ்லாட்டிற்கு இருக்கும் போது, 17 வயது மும்பை வீரரை சிஎஸ்கே அணி குறிவைத்திருக்கிறது என்றால் அவர்கள் மெகா ஏலத்தில் ஒரு மிகப்பெரிய பிட்டிற்கு செல்ல வாய்ப்புகள் இருக்கிறது.

rishabh pant
rishabh pant

சமீபத்தில் சுரேஷ் ரெய்னா விரைவில் ரிஷப் பண்ட் மஞ்சள் ஜெர்சியில் இருப்பார் என கூறியிருப்பதால், சிஎஸ்கே பண்ட்டை தோனியின் மாற்றுவீரராக கருத அதிக வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை பண்ட் தோனிக்கான மாற்றுவீரராக கருதப்பட்டால், அவருக்கான அதிகபட்ச தொகைவரை சிஎஸ்கே செல்ல வாய்ப்பு இருக்கிறது. அல்லது வேறுஒரு பெரிய வீரருக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

எப்படி ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் சிறந்த கண்டுபிடிப்பாக இருந்தாரோ, அதுபோல ஆயுஷ் மத்ரேவும் சிறந்த கண்டுபிடிப்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

பண்ட் - ஆயுஷ் மத்ரே
IPL 2025: மெகா ஏலத்தை கலக்கவிருக்கும் MI... வெளியேற்றிய 3 Uncapped இந்திய வீரர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com