ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக டிசம்பரில் மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஏலத்துக்கு முன்பாக அந்தந்த அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 31-ம் தேதியன்று அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
ஒவ்வொரு அணியின் தக்கவைத்த வீரர்கள் பட்டியலின் படி,
CSK - 5 வீரர்கள்
ருதுராஜ் கெய்க்வாட் - ரூ.18 கோடி
ரவீந்திர ஜடேஜா - ரூ.18 கோடி
மதீஷா பத்திரனா - ரூ. 13 கோடி
ஷிவம் துபே - ரூ. 12 கோடி
MS தோனி - ரூ. 4 கோடி
MI - 5 வீரர்கள்
ஜஸ்பிரித் பும்ரா - ரூ.18 கோடி
சூர்யகுமார் யாதவ் - ரூ.16.35 கோடி
ஹர்திக் பாண்டியா - ரூ.16.35 கோடி
ரோகித் சர்மா - ரூ.16.30 கோடி
திலக் வர்மா - ரூ.8 கோடி
RCB - 3 வீரர்கள்
விராட் கோலி - ரூ.21 கோடி
ரஜத் படிதார் - ரூ.11 கோடி
யாஷ் தயாள் - ரூ.5 கோடி
KKR - 6 வீரர்கள்
ரிங்கு சிங் - ரூ.13 கோடி
வருண் சக்ரவர்த்தி - ரூ.12 கோடி
சுனில் நரைன் - ரூ.12 கோடி
ஆண்ட்ரே ரசல் - ரூ.12 கோடி
ஹர்ஷித் ராணா - ரூ.4 கோடி
ரமன்தீப் சிங் - ரூ.4 கோடி
RR - 6 வீரர்கள்
சஞ்சு சாம்சன் - ரூ.18 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரூ.18 கோடி
ரியான் பராக் - ரூ.14 கோடி
துருவ் ஜுரேல் - ரூ.14 கோடி
ஷிம்ரன் ஹெட்மயர் - ரூ.11 கோடி
சந்தீப் சர்மா - ரூ.4 கோடி
SRH - 5 வீரர்கள்
ஹென்ரிச் கிளாசென் - ரூ.23 கோடி
பாட் கம்மின்ஸ் - ரூ.18 கோடி
அபிஷேக் சர்மா - ரூ.14 கோடி
டிராவிஸ் ஹெட் - ரூ.14 கோடி
நிதிஷ் குமார் ரெட்டி - ரூ.6 கோடி
GT - 5 வீரர்கள்
ரஷித் கான் - ரூ.18 கோடி
சுப்மன் கில் - ரூ.16.50 கோடி
சாய் சுதர்சன் - ரூ.8.50 கோடி
ராகுல் தெவாடியா - ரூ.4 கோடி
ஷாருக் கான் - ரூ.4 கோடி
DC - 4 வீரர்கள்
அக்சர் படேல் - ரூ.16.50 கோடி
குல்தீப் யாதவ் - ரூ.13.25 கோடி
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - ரூ.10 கோடி
அபிஷேக் போரல் - ரூ. 4 கோடி
LSG - 5 வீரர்கள்
நிக்கோலஸ் பூரன் - ரூ.21 கோடி
ரவி பிஷ்னோய் - ரூ.11 கோடி
மயங்க் யாதவ் - ரூ.11 கோடி
மொசின் கான் - ரூ.4 கோடி
ஆயுஷ் பதோனி - ரூ.4 கோடி
PBKS - 2 வீரர்கள்
ஷஷாங்க் சிங் - ரூ.5.5 கோடி
பிரப்சிம்ரன் சிங் - ரூ.4 கோடி
ஒவ்வொரு அணியும் தங்களுடைய தக்கவைக்கும் வீரர்களை அறிவித்திருக்கும் நிலையில், பல முக்கியமான வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் களமிறங்கவிருக்கின்றனர். அந்தவகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற்றியிருக்கும் 3 அன்கேப்டு இந்திய வீரர்கள் ஏலத்தை கலக்கவிருக்கின்றனர்.
2025 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தக்கவைப்பு பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா முதலிய 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ரிடென்சன் பட்டியலில் எப்படியும் அன்கேப்டு வீரராக நேஹல் வதேரா இருப்பார் என்று நினைத்த நிலையில், அவரை தக்கவைக்காமல் திலக் வர்மாவை தக்கவைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இஷான் கிஷன் மற்றும் வதேரா வெளியேற்றப்பட்டது விமர்சனங்களை பெற்றுவருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் விரைவாக ரன்கள் தேவைப்படும்போது முக்கியமான இடத்தில் களமிறங்கிய வதேரா, கிடைத்த சிறிய வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நேஹால் வதேரா 20 போட்டிகளில் 140.00 ஸ்ட்ரைக் ரேட்டில் 350 ரன்கள் எடுத்துள்ளார். அணி அழுத்தத்தில் இருந்தபோது பிக் ஹிட்டிங் ஷாட்களில் அவர் காட்டிய குணம் மிகவும் ஈர்க்கக்கூடிய விஷயமாக இருந்தது. ஒரு இந்திய இடது கை மிடில் ஆர்டர் பேட்டராக மெகா ஏலத்தில் அதிக மதிப்புடையவராக வதேரா நிச்சயம் இருப்பார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கவனம் ஈர்த்த மற்றொரு வீரராக இருந்தவர் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால். குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய திறமையாக வெளியே வந்த ஆகாஷ் மத்வால், ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நேரத்தில் பந்துவீச்சு பிரிவை வழிநடத்தினார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மத்வால் 13 போட்டிகளில் விளையாடி 22.32 சராசரியில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளராக ஏலத்தின் போது அனைத்து அணிகளும் எதிர்பார்க்கும் ஒருவீரராக நிச்சயம் மத்வால் இருப்பார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்து கவனம் ஈர்த்த மற்றொரு வீரர் நமன் திர். இளம் ஆல்ரவுண்டர் வீரரான நமன் திர் கடந்த சீசனில் மும்பை அணியில் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்தார். நமன் திர் பெரிய ஸ்கோரைப் பெறாவிட்டாலும் ஒரு பேட்டராக சிறந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
அவர் ஒரு சீம்-பவுலிங் ஆல்-ரவுண்டர் என்பதும் அவரை ஏலத்தில் மிகவும் விரும்பப்படும் வீரராக மாற்றுகிறது. ஒரு இம்பாக்ட் வீரராக களத்திற்கு வந்து ஆட்டத்தை மாற்றக்கூடிய திறனை வைத்திருக்கும் நமன் திர்ரை பல அணிகள் தங்கள் அணியில் ஒரு பகுதியாக மாற்ற முயற்சி செய்யலாம்.