IPL 2025 | ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் 11 uncapped வீரர்கள்! என்ன காரணம்?

இந்த ஏலத்தின் இன்னொரு முக்கியமான அம்சம், ஒவ்வொரு அணிக்கும் மொத்தம் 120 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது.
IPL
IPLIPL
Published on

ஐபிஎல் 2025க்கு முன்பான ரிடன்ஷன் பட்டியல் இந்த வாரம் வெளியானது. மெகா ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைத்திருக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. பல சூப்பர் ஸ்டார்கள் ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பல முன்னணி வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேசமயம் எந்த முறையும் இல்லாத அளவுக்கு இம்முறை 11 uncapped வீரர்கள் ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கிறார்கள். என்ன காரணம்?

Uncapped வீரர்களுக்கு 4 கோடி ரூபாய் வரம்பு என்பதால் அதுதான் அணிகள் அதிக வீரர்களை ரீடெய்ன் செய்யக் காரணமாக இருந்திருக்கிறது. இப்போது இம்பேக்ட் பிளேயர் வீதியின் காரணமாக ஒவ்வொரு போட்டியிலும் 12 வீரர்கள் விளையாடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு வீரர் அதிகம் விளையாடவேண்டும் என்பதால், டொமஸ்டிக் பிளேயர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர்களுக்கும் அதிகம் செலவு செய்யவேண்டும். முன்பைப் போல் அடிப்படை விலைக்கு நிறையப் பேரை வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தால், அது அவ்வளவாக பலன் தராது.

இந்த ஏலத்தின் இன்னொரு முக்கியமான அம்சம், ஒவ்வொரு அணிக்கும் மொத்தம் 120 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நிறைய முன்னணி வீரர்கள் ரிலீஸ் செய்யப்பட்டிருப்பதாலும், ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் வீரர்களே 21, 23 கோடி ரூபாய் வரை பெற்றிருப்பதாலும், நிச்சயம் இந்த முறை ஏலத்தில் 25-30 கோடி வரையிலும் வீரர்கள் போகலாம். அதிக தொகை கொடுக்கப்பட்டிருப்பதால், அணிகள் பெரிதாக யோசிக்காமல் போகக்கூடும். அது மற்ற வீரர்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நிலையில், ஏலத்தில் தரமான uncapped வீரர்களை வாங்குவதற்குத் தேவையான தொகை இல்லாமலும் கூடப் போகலாம்.

அப்படிப்பட்ட நிலையில், 4 கோடிக்கே வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று ஐபிஎல் நிர்வாகம் சொல்லியிருப்பது சில அணிகளுக்கு வரப்பிரசாதகமாக அமைந்திருக்கிறது. ரமன்தீப், தெவேதியா போன்ற ஃபினிஷர்கள் நிச்சயம் 7-8 கோடி வரை ஏலத்தில் பெற்றிருப்பார்கள். அந்த இடத்துக்கு ஒட்டுமொத்தமாகவே வீரர்கள் குறைவு தான். அதனால் அதிக தேவை ஏற்பட்டிருக்கும். பிரப்சிம்ரன் போன்ற ஒரு விக்கெட் கீப்பர் ஓப்பனருக்கு பல அணிகள் போட்டி போட்டிருப்பார்கள். அதனால் தான் முடிந்த அளவுக்கு uncapped வீரர்களை ரீடெய்ன் செய்ய அணிகள் முடிவு செய்திருக்கின்றன.

5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள் uncapped வீரர்களாகக் கருதப்படுவார்கள் என்று ஐபிஎல் நிர்வாகம் புதிய விதியைக் கொண்டுவந்திருப்பது சூப்பர் கிங்ஸ் தோனியைத் தக்கவைத்துக்கொள்ள ஏதுவாக அமைந்துவிட்டது. அதற்கு விளக்கமே தேவையில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ்

தோனி
தோனிIPL Page

ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் uncapped வீரர்: மஹேந்திர சிங் தோனி
5 முறை ஐபிஎல் வென்ற கேப்டனை, தங்கள் அடையாளத்தை எப்படி சூப்பர் கிங்ஸ் ரீடெய்ன் செய்யாமல் விடமுடியும்!
மீதமிருக்கும் தொகை - 55 கோடி
மீதமிருக்கும் RTM - 1

டெல்லி கேபிடல்ஸ்

Abhishek Porel
Abhishek PorelAP

ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் uncapped வீரர்: அபிஷேக் பொரெல்


கடந்த சீசனில் டெல்லி நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெற்றார். 2023ல் பண்ட் இல்லாதபோது கீப்பராக இடத்தை நிரப்பியவர், கடந்த சீசன் நம்பர் 3 பேட்ஸ்மேனாகவும் நன்றாக செயல்பட்டார். விக்கெட் கீப்பரும் என்பதால் அது நிச்சயம் அதிக தேவையை ஏற்படுத்தியிருக்கும்.
மீதமிருக்கும் தொகை - 73 கோடி
மீதமிருக்கும் RTM - 2

குஜராத் டைட்டன்ஸ்

Rahul Tewatia
Rahul Tewatia Gujarat Titans

ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் uncapped வீரர்கள்: ராகுல் தெவேதியா, ஷாரூக் கான்
இந்திய கிரிக்கெட் அரங்கில் இரண்டு சிறந்த ஃபினிஷர்களை 8 கோடிக்கு வாங்கலாம் என்றால், யார் வேண்டாம் என்று சொல்வார்கள். ஷாரூக் எல்லாப் போட்டிகளிலும் ஆடுவாரா என்பது சந்தேகம் தான் என்றாலும், ஒரு மிகச் சிறந்த இம்பேக்ட் ஆப்ஷனாக இருப்பார்.
மீதமிருக்கும் தொகை - 69 கோடி
மீதமிருக்கும் RTM - 1

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் uncapped வீரர்கள்: ஹர்ஷித் ராணா, ரமந்தீப் சிங்
நிச்சயம் இவர்கள் இருவருக்கும் நைட்ரைடர்ஸ் நிச்சயம் 17-18 கோடி செலவு செய்திருக்கவேண்டும். இருவருமே 14 போட்டிகளுமே ஆடக்கூடிய வீரர்கள். ரிடன்ஷன் டெட்லைன் வரை ஹர்ஷித்துக்கு அறிமுகம் கொடுக்காமல் இந்திய அணி நிர்வாகம் கேகேஆருக்கு பெரும் உதவி செய்திருக்கிறது.
மீதமிருக்கும் தொகை - 51 கோடி
மீதமிருக்கும் RTM - 0

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் uncapped வீரர்கள்: மோசின் கான், ஆயுஷ் பதோனி
இருவருமே பெரும்பாலும் இம்பேக்ட் வீரர்களாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு அதிகம். மிகப் பெரிய தொகைக்குப் போயிருக்க மாட்டார்கள் என்றாலும், தங்கள் ரோலை சரியாகச் செய்பவர்கள் என்பதால் ரீடெய்ன் செய்திருக்கிறது லக்னோ.
மீதமிருக்கும் தொகை - 69 கோடி
மீதமிருக்கும் RTM - 1

மும்பை இந்தியன்ஸ்

ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் uncapped வீரர்: -
நேஹல் வதேரா

அதிக தொகை எதிர்பார்த்து தன்னை ரீடெய்ன் செய்திருக்கவேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். மற்றபடி அவரை ரீடெய்ன் செய்யாமல் விட்டதற்கு சரியான காரணமே இருக்க முடியாது.
மீதமிருக்கும் தொகை - 45 கோடி
மீதமிருக்கும் RTM - 1

பஞ்சாப் கிங்ஸ்

ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் uncapped வீரர்கள்: பிரப்சிம்ரன் சிங், சஷாங்க் சிங்
இருவருமே ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கார்கள். சஷாங்க் சிங் கடந்த ஆண்டு நல்ல ஃபினிஷராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார்.
மீதமிருக்கும் தொகை - 110.5 கோடி
மீதமிருக்கும் RTM - 4

ராஜஸ்தான் ராயல்ஸ்

ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் uncapped வீரர்: சந்தீப் ஷர்மா
5 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய அணிக்கு விளையாடாததால் uncapped பிளேயராக ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கிறார். பவர்பிளே, டெத் என அனைத்து ஏரியாவிலும் போடக்கூடிய ஒருவருக்கு 4 கோடி தான் என்பது செம லாட்டரி.
மீதமிருக்கும் தொகை- 41 கோடி
மீதமிருக்கும் RTM - 0

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு

ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் uncapped வீரர்: யஷ் தயால்
4 கோடிக்கு ஒரு ரெகுலர் பௌலர் கிடைக்கிறார் என்பதால் யோசிக்காமல் தயாலை டிக் செய்திருக்கிறது ஆர்சிபி.
மீதமிருக்கும் தொகை - 83 கோடி
மீதமிருக்கும் RTM - 3

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ரீடெய்ன் செய்யப்பட்டிருக்கும் uncapped வீரர்: -
ரீடெய்ன் செய்யும் அளவுக்கு தரமான, நிரூபித்த, நம்பிக்கையான uncapped வீரர்கள் இல்லை என்பதே உண்மை.
மீதமிருக்கும் தொகை - 45 கோடி
மீதமிருக்கும் RTM - 1

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com