கெத்துகாட்டி ஏமாற்றிய இந்தியா - நியூ,; மீண்டுவந்து வெற்றிக்கொடி நாட்டிய பாக்,- இங்கிலாந்து

கெத்துகாட்டி ஏமாற்றிய இந்தியா - நியூ,; மீண்டுவந்து வெற்றிக்கொடி நாட்டிய பாக்,- இங்கிலாந்து
கெத்துகாட்டி ஏமாற்றிய இந்தியா - நியூ,; மீண்டுவந்து வெற்றிக்கொடி நாட்டிய பாக்,- இங்கிலாந்து
Published on

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்தத் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த நியூசிலாந்து அணியும், இந்திய அணியும் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அதேநேரத்தில் மிகவும் சிரமப்பட்டு இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன. இந்த இரு அணிகளின் குறித்து இங்கு பார்க்கலாம்.

1. முதலில் பேட்டிங்

நியூசிலாந்து:

சிட்னியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு டாஸ் வென்ற சான்ஸ் கிடைத்தும் பேட்டிங்கை தேர்வு செய்தது அந்த அணி தோல்வி அடைய காரணமாக அமைந்தது.

இந்தியா:

அடிலெய்டு ஓவலில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில், நியூசிலாந்துப் போன்று டாஸ் வெல்லும் வாய்ப்பு கிடைக்காததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானது. இதனால் நியூசிலாந்து, இந்தியா இரண்டுமே முதலில் பேட்டிங் செய்து தோல்வியை தழுவின.

2. வலுவான துவக்கத்தை அளிக்காதது:

நியூசிலாந்து:

பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில், நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களான ஃபின் ஆலன் 4 ரன்களிலும், கான்வே 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட்டாகி நல்ல துவக்கத்தை அளிக்கவில்லை. இதுவும் தோல்விக்கு காரணம். இதனால் பவர் பிளேயில் இந்த அணி மோசமான ரன் ரேட்டில் இருந்தது. அதாவது 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 38 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி எடுத்திருந்தது.

அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியா:

இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில், இந்திய அணியின் துவக்க வீரர்களான கே.எல்.ராகுல் 5 ரன்களிலும், ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்து வலுவான துவக்கத்தை அளிக்க தவறினர். இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் பவர் பிளேயில், அதாவது 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, நியூசிலாந்தைப் போன்றே ஒரு விக்கெட்டை இழந்து 38 ரன்கள் எடுத்திருந்தது.

அதேநேரத்தில் இங்கிலாந்து அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது.

3. குறைந்த இலக்கு:

நியூசிலாந்து:

இதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சிறப்பான பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்களை கொண்டிருந்தும் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. எளிய இலக்கை நிர்ணயித்து எதிரணிக்கு கடுமையான நெருக்கடி கொடுக்க நியூசிலாந்து அணி தவறிவிட்டது.


இந்தியா:

அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள், திறமையான இளம் வீரர்கள் இருந்தும் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது ஓரளவு நல்ல ஸ்கோர் தான் என்றாலும், இங்கிலாந்து போன்ற அணியுடன் விளையாடும்போது கூடுதலாக 180+ எடுத்திருந்தால், அந்த அணிக்கு அது நெருக்கடியை கொடுத்திருக்கும். ஆனால், இந்திய அணி அதனை தவறவிட்டு விட்டது.

4. பாகிஸ்தான், இங்கிலாந்து இரண்டு அணிகளும் போராடி வந்தது

பாகிஸ்தான்:

சூப்பர் 12 சுற்றில் இந்தியா, ஜிம்பாம்பேக்கு எதிராக முதல் இரண்டுப் போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, கிட்டத்தட்ட அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு குறைந்தநிலையில், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது.

இங்கிலாந்து:

எளிமையாக சூப்பர் 12 சுற்றில் வெற்றிப்பெற வேண்டிய இங்கிலாந்து அணி, மழையால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டி கைவிடப்பட்டும், டக்வொத் லூயில் முறையால் அயர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் தோல்வியடைந்தது. எனினும், ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

5. பவர் பிளேயில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணி வீரர்கள்

பாகிஸ்தான்:

ரிஸ்வான் (57) மற்றும் பாபர் அசாம் (53) வலுவான துவக்கத்தை அளித்து பவர் பிளேயில் 63 ரன்கள் எடுத்திருந்தது மிக முக்கிய காரணம்.

இங்கிலாந்து:

அரையிறுதிப் போட்டியில், பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் கூட்டணி அமைத்து ஆடிய நிலையில், ஜோஸ் பட்லர் (80), அலெக்ஸ் ஹேல்ஸ் (86) ரன்கள் எடுத்ததே இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து வெற்றிபெற காரணம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com