2022 டி20 உலக கோப்பையின் மெயின் சுற்றான சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் தொடங்கியதிலிருந்தே எதிர்பார்க்காத அணிகள் அபாரமாக செயல்பட்டு இதற்கு முன்னர் முறியடிக்க முடியாமல் இருந்த ரெக்கார்டுகளை முறியடித்து வருகின்றன.
2021ஆம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணியை பரம எதிரியான பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இதுவரை உலககோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதில்லை என்ற தனிப்பட்ட இந்தியாவின் ரெக்கார்டை உடைத்து இந்திய அணிக்கு எப்போதும் மறக்கமுடியாத ஒரு தோல்வியை பரிசளித்தது பாகிஸ்தான் அணி. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டின் டி20 உலககோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி இந்திய பாகிஸ்தான் மக்கள், ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் உலக மக்கள் இடையேயும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பல எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டி விறுவிறுப்பாக கடைசிபந்து வரை சென்று இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தியா பாகிஸ்தான் போட்டிதான் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தாலும் சூப்பர் 12இல் பங்குபெற்ற அனைத்து அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுடன் மட்டுமில்லாமல், பல சாதனைகளை நிகழ்த்தி டி20 உலககோப்பையை கொண்டாட்டத்தின் மற்றொரு எல்லைக்கே கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் சூப்பர் 12 போட்டிகளில் நடந்த சுவாரஸ்யமான மொமண்டுகள்,
* 13 வருடங்களுகு பிறகு ஒயிட் பால் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது நியூசிலாந்து
* ஆஸ்திரேலியா டி20 போட்டிகளில் அதன் சொந்த மண்ணில் 111 என்ற குறைவான டோட்டலை பெற்றது
* உலக கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து அணி அதிகபட்ச ரன்கள் (200) அடித்தது
* 26 போட்டிகளில் டி20 1000 ரன்கள் அடித்த டெவான் கான்வே விராட் கோலி சாதனை கடந்து, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை சமன் செய்துள்ளார்.
* கடந்த 1 வருடத்தில் டி20யில் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்து ஹசல்வுட் ( 24 ) சாதனை
* டி20 போட்டிகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் அதிக பந்துகளை சந்தித்த இங்கிலாந்து வீரர் என்ற மோசமான பதிவை பெற்றுள்ளார் முன்னால் டி20 நம்பர் 1 பேட்ஸ்மேன் மாலன் (30)
*ஒரு அணியின் 10 வீரர்களும் கேட்ச் முறையில் அவுட் ஆவது 2ஆவது முறையாக நடந்துள்ளது. ஆப்கன் அணி இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகளையும் கேட்ச் முறையில் இழந்தது.
* டி20யில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து வீரராக சாம் கரன் (5/10) சாதனை படைத்துள்ளார்
* ஒரு போட்டியின் கடைசி 3 ஓவர்களில் இந்தியா வெற்றிகரமாக அதிக ரன்களை ( 48 ) அடித்து வெற்றி பெற்றுள்ளது
* ஒரு போட்டியை கடைசி பந்தில் இந்தியா வெற்றி பெறுவது இது 4ஆவது முறை
* இதுவரை ஒரு விக்கெட்டுக்கு இந்தியாவின் அதிகபட்ச பார்ட்ன்பர்ஷிப் ஆக - 113 ரன்கள் சேர்த்துள்ளனர் விராட்கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா
*சூரியகுமார் யாதவை குறைவான ரன்களுக்கு வெளியேற்றிய அணியாக 4 முறை வெளியேற்றி பாகிஸ்தான் தொடர்கிறது
* பாகிஸ்தான் அணிக்கு எதிராக கேஎல் ராகுலின் கடைசி 4 போட்டிகளின் ரன்கள்- 4,28,0,3
* இதுவரையிலான டி20 உலககோப்பையில் முதல் ஓவரில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள்- 23 ரன்கள் தென்னாப்பிரிக்கா அணியால் அடிக்கப்பட்டது.
இன்று 4.30 மணிக்கு நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதால் இந்த போட்டியும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.