ஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் சேர்ப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் சேர்ப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் சேர்ப்பு
Published on

2022 ஆம் ஆண்டு நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள், நான்கு வருடத்துக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. ஆசிய நாடுகளில் உள்ள வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில், கடந்த 2010, 2014 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட்டும் இடம் பெற்றிருந்தது. சர்வதேச போட்டிகளை காரணம் காட்டி, இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளுக்கு அணியை அனுப்பவில்லை. கடந்த முறை (2018 ஆம் ஆண்டு) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் நீக்கப்பட்டது.

ஆனால், கிரிக்கெட்டை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், 2022-ம் ஆண்டு சீனாவின் ஹாங்ஜோவ் (Hangzhou) நகரில் நடக்கும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க முடிவு செய்துள் ளது. ஆனால், அதில் இடம் பெறுவது 50 ஓவர் போட்டியா அல்லது டி20 போட்டியா என்பது இறுதி செய்யப்படாமல் இருந்தது. அது டி20 கிரிக் கெட் போட்டிதான் என்று இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘’2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் மற்றும் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் மூலம் முறைப்படித் தெரியப்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com