இந்திய டி20அணி: ஹர்திக் பாண்டியா இருக்கையில் சூர்ய குமாரை கேப்டானாக நியமித்தது ஏன்? பின்னணி இதுதான்!

ரோகித் சர்மாவின் ஓய்வை அடுத்து இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு யார் கேப்டன் என்ற கேள்வி முடிவுக்கு வந்துள்ளது. மூத்த வீரர் ஹர்திக் பாண்டியாவை தாண்டி சூர்யகுமார் கேப்டனாக காரணம் என்ன? இந்த சிறப்பு செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சூர்யகுமார் யாதவ், ஹர்திக்
சூர்யகுமார் யாதவ், ஹர்திக்pt web
Published on

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற கையோடு ஓய்வினை அறிவித்தார் கேப்டன் ரோகித் சர்மா. மூத்த வீரர்களான விராட் கோலி, ரவிந்திர ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக தெரிவித்தனர். இதனால், இந்திய டி20 அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. ரோகித் சர்மாவின் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா அடுத்த கேப்டனாவார் என்று பல தரப்பினரும் பேசி வந்தனர்.

இச்சூழலில்தான் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றார். அவர் தனது பணியை தொடங்கிய நாளிலேயே சூர்யகுமார் பெயரை டி20 கேப்டனாக பரிந்துரைத்தாக தெரிகிறது. இருப்பினும் பிசிசிஐ மூத்த நிர்வாகிகள் ஹர்திக் பாண்டியா கேப்டனாக வேண்டும் என கூறிவந்தனர்.

அதிக பேசு பொருளாக மாறிய இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இலங்கைக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு இருந்தது. சூர்யகுமார் கேப்டன், சுப்மன் கில் துணை கேப்டன் என பிசிசிஐ அறிவித்தது. ஹர்திக் பாண்டியாவும் அணியில் இடம் பெற்றுள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

சூர்யகுமார் யாதவ், ஹர்திக்
சிலி|ஏரியில் இருந்து ஒலிக்கும் மர்மசத்தம்! வேற்றுக்கிரகத்தில் இருந்துவரும் சத்தமா? ஆய்வு சொல்வதென்ன?

கௌதம் கம்பீரின் அழுத்தம் ஒரு புறம் இருக்கும் பட்சத்தில் இந்திய அணி வீரர்களும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்பட்ட சூர்யகுமார் தங்களுக்கு அதிக ஃப்ரீடம் கொடுத்ததாக இளம் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்web

ரோகித் சர்மா போன்றதோறு செயல்பாடுகளை சூர்யகுமார் பின்பற்றுவதால், அவர் சரியான தேர்வாக இருக்கும் என பிசிசிஐ கருதியிருக்கலாம். அதேநேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் உடல் நிலை பிரச்னையும், அவரை கேப்டனாக தேர்வு செய்யாததற்கு ஒரு காரணியாக கருதப்படுகிறது.

டி20 கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பதவி கூட கிடைக்காத நிலையில், ஹர்திக் பாண்டியா, தனது மனைவி நட்டாஷாவுடன் மணமுறிவு ஏற்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அடுத்ததுடுத்து இரண்டு அதிர்ச்சி தகவல்களை தாங்கி கொள்ள முடியாமல், ஹர்திக் பாண்டியா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

சூர்யகுமார் யாதவ், ஹர்திக்
“என்னிடம் இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” - சில போட்டிகளில் உட்கார வைக்கப்பட்டது குறித்து ஷமி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com