கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த தனி நீதிபதி, தடையை ரத்து செய்தார். இதனை எதிர்த்து, கேரள உயர்நீதிமன்றத்தில் பிசிசிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை தொடரும் என உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வேகபந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்ற நீக்கியுள்ளது. அத்துடன் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஸ்ரீசாந்திற்கு தற்போது 37 வயது ஆகிறது. அவர் உடல் எடையும் அதிகரித்து, பயிற்சியில் ஈடுபடுவதையும் தொடரவில்லை. எனவே அவர் இனி கிரிக்கெட் விளையாடுவாரா ? என்பது சந்தேகத்திற்குரிய ஒன்று தான்.