#PBKSvSRH டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு! மயங்க் அகர்வால் இல்லை.. கேப்டன் இவர்தான்!

#PBKSvSRH டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு! மயங்க் அகர்வால் இல்லை.. கேப்டன் இவர்தான்!
#PBKSvSRH டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு! மயங்க் அகர்வால் இல்லை.. கேப்டன் இவர்தான்!
Published on

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அதே உத்வேகத்தை தொடரும் முனைப்பில் இன்றும் அந்த அணி களமிறங்குகிறது.

மறுபக்கம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வலுவான அணியான கொல்கத்தாவை சாய்த்தது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ராகுல் திரிபாதிமார்க் ராம் ஆகியோர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். டி.நடராஜன், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜேன்சன், உம்ரான் மாலிக் என ஹைதராபாத்தின் பவுலிங் அசுர பலத்தில் உள்ளது. ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் தன் வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஷிகர் தவான் அணியை வழிநடத்த உள்ளார். தவான் கடைசியாக 2014 ஆண்டு சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட்டர். அந்த சீசனில் கேப்டனாக் அவரது ஆட்டம் பஞ்சாப் அணிக்கு எதிராகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், ஜே. சுசித், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன்

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரான் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com