50-வது லீக் போட்டியில் ஜெயிக்கப் போவது யார்? - டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ்

50-வது லீக் போட்டியில் ஜெயிக்கப் போவது யார்? - டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ்
50-வது லீக் போட்டியில் ஜெயிக்கப் போவது யார்? - டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ்
Published on

50-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை தேர்வுசெய்து, டெல்லி அணியை பேட்டிங் செய்ய பணித்துள்ளது.

15வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் 49 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 50-வது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன்வில்லியம்சன், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது.

இந்த தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 5 வெற்றி 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘ப்ளே ஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் வென்று நான்காவது இடத்திற்கு முன்னேற ஹைதராபாத் அணி தீவிர முனைப்பு காட்டும்.

மறுபுறம் இந்த தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 4 வெற்றி 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது மிக அவசியம்.

புள்ளிப்பட்டியலில் முன்னேறவும், பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்கவும் இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக கருதப்படுவதால், இவ்விரு அணிகளும் சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி கேபிட்டல்ஸ்:

மன்தீப் சிங், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், ரைபல் பட்டேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, அன்ரிச் நோர்ட்சே

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், சீன் அபோட், புவனேஷ்வர் குமார், ஸ்ரேயாஸ் கோபால், உம்ரான் மாலிக், கார்த்திக் தியாகி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com