தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மீண்டும் ஸ்டெயின்!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மீண்டும் ஸ்டெயின்!
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மீண்டும் ஸ்டெயின்!
Published on

காயம் காரணமாக, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் களமிறங்காமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி, ஒரு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் ஸ்டெயின் தேர்வாகியுள்ளார். வேகப்பந்து வீச்சில் ஸ்டெயின் தவிர்த்து, ரபாடா, பிலாண்டர், லுங்கி நிகிடி ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் கேசவ் மகராஜ், ஷாம்சி ஆகியோருடன், ஷான் வான் பெர்க் என்ற வீரர் அறிமுகமாகிறார். 

 2016-ம் வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கடைசியாக ஸ்டெயின் விளையாடினார். பின் கால் மற்றும் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றார். அப்போதும் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இந்த தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர் மோர்கல் ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஸ்டெயின் வருகை அணிக்கு வலு சேர்க்கும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 419 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஸ்டெயின் இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், தென்னாப்பிரிக் காவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷான் பொல்லாக் சாதனையை சமன் செய்வார். டிவில்லியர்ஸும் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் விக்கெட் கீப்பர் கிளாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com