"1 ரன் அடிக்க 38 பந்துகள்" ஸ்டீவ் ஸ்மித்தால் கடுப்பான ரசிகர்கள்

"1 ரன் அடிக்க 38 பந்துகள்" ஸ்டீவ் ஸ்மித்தால் கடுப்பான ரசிகர்கள்
"1 ரன் அடிக்க 38 பந்துகள்" ஸ்டீவ் ஸ்மித்தால் கடுப்பான ரசிகர்கள்
Published on


நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த பகலிரவு டெஸ்டில் 296 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் 247 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த டெஸ்டிலும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணியின் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் 80 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய மார்னஸ் லபூஷேன் அரை சதம் கடந்து சிறப்பாக விளையாடி வருகிறார். வார்னர் ஆட்டமிழந்த பின்பு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய முதல் ரன்னை எடுப்பதற்கு மிகவும் தடுமாறினார். ஸ்மித் 38 ஆவது பந்தை சந்தித்தபோதுதான் தன்னுடைய இன்னிங்ஸின் முதல் ரன்னை எடுத்தார்.

இத்தனை பந்துகளை சந்தித்து 1 ரன்னை எடுத்த ஸ்மித்தை மைதானத்தில் இருந்து ரசிகர்கள் கைதட்டி கேலி செய்தனர். ஐசிசியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எல்லோரும் அமர்ந்து கை தட்டுவதுபோல வீடியோவை வெளியிட்டு ஸ்மித்தை நக்கல் செய்துள்ளது. இப்போது வரை ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. ஆஸியின் மார்னஸ் லபூஷேன் 68 ரன்களும், ஸ்மித் 28 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com