புதிய மைல்கல்லை எட்டினார் ஆஸி. கேப்டன் ஸ்மித்!

புதிய மைல்கல்லை எட்டினார் ஆஸி. கேப்டன் ஸ்மித்!
புதிய மைல்கல்லை எட்டினார் ஆஸி. கேப்டன் ஸ்மித்!
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 351 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 162 ரன்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. அதிகப்பட்சமாக தொடக்க வீரர் பான்கிராஃப்ட் 53 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் கேஷவ் மகராஜ், மோர்னே மோர்கல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இரண்டாவது இன்னிங்கிஸில் 38 ரன் எடுத்தார். அவர் 25 வது ரன்னை கடந்தபோது, சர்வதேச அரங்கில் பத்தாயிரம் ரன்களை எட்டியுள்ளார். 62 டெஸ்டில் 6151, 108 ஒரு நாள் போட்டியில் 3431, முப்பது டி20 போட்டியில் 431 ரன்கள் என 10,013 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 13-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com