கடைசி பந்துவரை நீடித்த பரபரப்பு... கரீபியன் ப்ரீமியர் டி20 லீக்கில் பிராவோ அணி சாம்பியன்

கடைசி பந்துவரை நீடித்த பரபரப்பு... கரீபியன் ப்ரீமியர் டி20 லீக்கில் பிராவோ அணி சாம்பியன்
கடைசி பந்துவரை நீடித்த பரபரப்பு... கரீபியன் ப்ரீமியர் டி20 லீக்கில் பிராவோ அணி சாம்பியன்
Published on

2021 ஆம் ஆண்டுக்கான கரீபியன் ப்ரீமியல் லீக் டி20 கோப்பையை டுவைன் பிரவோ தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி வென்றுள்ளது.

சிபிஎல் டி20 போட்டிகள், ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 15 வரை வெஸ்ட் இண்டீஸ் தீவுகளின் செயிண்ட் கிட்ஸில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் செயிண்ட் லுசியா கிங்ஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸும் மோதின. முதலில் விளையாடிய பிளெட்சர் தலைமையிலான செயிண்ட் லுசியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கார்ன்வெல், ராஸ்டன் சேஸ் தலா 43 ரன்கள் எடுத்தார்கள்.

இதன்பிறகு விளையாடிய செயிண்ட் கிட்ஸ் அணி, தொடக்கத்திலேயே கிறிஸ் கெயில் டக் அவுட் ஆனார். ஜோசுவா சில்வா 37 ரன்களும் டிரேக்ஸ் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் எடுத்து செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்கள். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி இரு பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டன. 5-வது பந்தில் பவுண்டரி அடித்த டிரேக்ஸ், கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து பரபரப்பான வெற்றியை பெற்றது.

இதனால் பிராவோ தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி சிபிஎல் 2021 கோப்பையை வென்றுள்ளது. கடந்த வருடம் டிரின்பேகோ அணியில் பிராவோ விளையாடியபோதும் அந்த அணி கோப்பையை வென்றது. இதன்பிறகு கடந்த வருடம் கடைசி இடம் பிடித்த செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு மாறி தலைமை தாங்கி கோப்பையை வென்றுள்ளார் பிராவோ.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com