நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டரில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடின.
டாஸை இழந்து முதலில் பேட்ஸ் செய்த பெங்களூர் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது.
சுலபமான இலக்கை விரட்டிய ஹைதராபாத்துக்கு முதல் ஓவரிலேயே கோஸ்வாமியின் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது பெங்களூர்.
இருப்பினும் அந்த அணியின் கேப்டன் வார்னர் நிதானமாக விளையாடினார்.
சிராஜ் வீசிய 6வது ஓவரின் நான்காவது பந்தை வார்னர் ஆட முயன்று மிஸ் செய்ய அது கிளவ்வில் உரசியபடி சென்ற பந்து விக்கெட் கீப்பர் ஏபிடியின் கைகளை தஞ்சமடைந்தது.
அதற்கு அவுட் என அம்பயரிடம் அப்பீல் செய்தார் சிராஜ். இருப்பினும் அம்பயர் அவுட் கொடுக்காமல் இருக்க நீண்ட யோசனைக்கு பிறகு கோலி அம்பயரின் முடிவை ரிவ்யூ செய்தார். அதனால் வார்னர் அவுட்டாகி வெளியேறினார்.
பாண்டே ஆடம் சாம்பாவின் ஒன்பதாவது ஓவரில் 24 ரன்களுக்கு வெளியேறினார்.
தொடர்ந்து பிரியம் கார்கும் 7 ரன்களில் சாஹலின் சுழலில் சிக்கி வெளியேறினார்.
மறுமுனையில் விளையாடிய வில்லியம்சன் அபாரமாக பேட்டிங் செய்தார். 44 பந்துகளில் 50 ரன்களை அடித்து ஹைதராபாத்துக்கு வெற்றியை பரிசளித்தார் வில்லியம்சன்.
ஹோல்டரும், வில்லியம்சன்னும் 65 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
19.4 ஓவர் முடிவில் 132 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் டெல்லியுடன் இரண்டாவது குவாலிபையரில் விளையாடுகிறது ஹைதராபாத்.