துபாயில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான நடப்பு ஐபிஎல் சீஸனின் 26வது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.
டாஸ் வென்று முதலில் பேட் ஹைதராபாத் அணிக்காக கேப்டன் டேவிட் வார்னரும், மணீஷ் பாண்டேவும் பொறுப்போடு விளையாடினர்.
இருவரும் 73 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இருபது ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை குவித்தது ஹைதராபாத்.
ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ள பென் ஸ்டோக்ஸின் வருகை பேட்டிங்கில் பலம் சேர்க்கும் என எதிர்பார்த்த நிலையில் அது ஏமாற்றமாகவே அமைந்தது.
ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ராஜஸ்தானின் பேட்டிங் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஸ்டோக்ஸ், பட்லர் மற்றும் ஸ்மித் ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுக்க தவறியதால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது ராஜஸ்தான்.
போராடி பார்த்த சஞ்சு சாம்சன் 26 ரன்களுக்கு அவுட்டானார்.
ராஜஸ்தானின் லாஸ்ட் பேட்டிங் ஹோப்பான ரியான் பராக்கும், திவாட்டியாவும் இறுதியில் அதிரடி காட்டினர்.
இருவரும் 85 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தானுக்கு வெற்றியை வசமாக்கினர்.
19.5 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது ராஜஸ்தான்.