ஹைதராபாத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை : மேட்ச் ரிவ்யூ

ஹைதராபாத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை : மேட்ச் ரிவ்யூ
ஹைதராபாத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை : மேட்ச் ரிவ்யூ
Published on

சின்னஞ்சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோதி விளையாடின சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும்.


இரு அணியிலும் பவர் ஹிட்டர்கள் அதிகம் இருப்பதால் பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ரோகித்தும், டிகாக்கும் பவர்பிளேயில் பேட்டிங்கில் கெத்து காட்டும் முனைப்போடு களம் இறங்கினர்.
ஹைதராபாத் அணிக்காக முதல் ஓவரை சந்தீப் ஷர்மா வீச அதை எதிர்கொண்டு ஆடினார் ரோகித் ஷர்மா. அந்த ஓவரின் நான்காவது பந்தை சிக்ஸருக்கு விரட்டியவர் அடுத்த பந்திலேயே அவுட்சைட் எட்ஜாகி வெளியேறினார்.
ரோகித்தை ரிவ்யூ ஆப்ஷனின் மூலம் காலி செய்தது ஹைதராபாத்.


அதற்கடுத்து களம் இறங்கிய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், டிகாக்கோடு கூட்டு சேர்ந்து பலமான ஹைதராபாத்தின் பவுலிங் லைன் அப்பை ஒரு கை பார்த்தார்.
பவர் பிளே முடிய ஒரேயொரு பந்து மட்டுமே எஞ்சியிருக்க பதினெட்டு பந்துகளில் 27 ரன்களை குவித்து அவுட்டானார் சூர்யகுமார் யாதவ். அவரது இன்னிங்ஸில் ஆறு பவுண்டரிகளும் அடங்கும்.

பின்னர் களம் இறங்கிய இஷான் கிஷன் பொறுப்போடு ஆடினார்.
டிகாக்கும், கிஷனும் இணைந்து 78 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.
டிகாக் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹைதராபாத் ஃபீல்டர்கள் வீண்டிக்க அதை பயன்படுத்தி அரை சதம் கடந்தார்.
39 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களை அடித்து 67 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத் கான் சூழலில் சிக்கி அவுட்டானார் டிகாக்.


மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முனைப்போடு ஆடுகளத்திற்குள் லேண்டானார் ஹர்த்திக் பாண்டியா.
நிதானமாக ஆடிய கிஷன் 31 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸ் அடிக்க முயன்று மணீஷ் பாண்டேவின் சென்சேஷனல் கேட்ச்சால் ஆட்டம் இழந்தார்.
பின்னர் களம் இறங்கிய பொல்லார்ட் தன் பங்கிற்கு 25 ரன்களை குவித்தார்.
19 பந்துகளில் 28 ரன்களை குவித்து அவுட்டானர் ஹர்திக் பாண்டியா. இதில் இரண்டு சிக்ஸர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும்.

கடைசி நான்கு பந்துகள் மட்டுமே மிச்சமிருக்க களம் இறங்கிய குருனால் பாண்டியா 20 ரன்களை குவித்தார்.
ஹைதராபாத் அணி சார்பில் ரஷீத் கானும், தமிழக வீரர் நடராஜனும் தலா 11 டாட் பால்களை வீசியிருந்தனர்.
இருபது ஓவர் முடிவவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது மும்பை அணி.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய ஹைதராபாத்துக்கு சர்வதேச கிரிக்கெட்டின் டேஞ்சரஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களம் இறங்கினர்.
பேர்ஸ்டோ ஒரு பக்கம் அதிரடி காட்ட, வார்னர் அடக்கி வாசித்தார்.
15 பந்துகளில் இரண்டு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுணடரிகளை அடித்து 25 ரன்களில் அவுட்டானார் பேர்ஸ்டோ.

பின்னர் களம் இறங்கிய மணீஷ் பாண்டே 19 பந்துகளில் 30 ரன்களை குவித்து தன் விக்கெட்டை இழந்தார்.
மிடில் ஆர்டரில் இறங்கிய வில்லியம்சன்னும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப மொத்த பொறுப்பையும் தனது தோள்களில் சுமந்து கொண்டு கேப்டன்சி நாக் ஆடினார் வார்னர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்த பிரியம் கார்க் ஏமாற்றினார்.


44 பந்துகளில் 60 ரன்களை குவித்திருந்தார் வார்னர். அதில் ஐந்து பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
ஓவருக்கு இருபது ரன்களுக்கு மேல் தேவைப்பட அதை எடுக்க முடியாமல் தடுமாறி வீழ்ந்தது ஹைதராபாத்.
இருபது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்த ஹைதராபாத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
போல்ட், பும்ரா, பட்டின்சன் என மும்பை அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர்.


கேப்டன்சியில் கெத்து காட்டி மும்பையை சாம்பியன் அணி என மீண்டும் நிரூபித்துள்ளார் ரோகித் ஷர்மா.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com