டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா : பங்களாதேஷ் முதல் பேட்டிங்

டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா : பங்களாதேஷ் முதல் பேட்டிங்
டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா : பங்களாதேஷ் முதல் பேட்டிங்
Published on

பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றது.

உலகக் கோப்பை தொடரின் 5வது லீக் போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிக்கு இடையே இன்று நடைபெறுகிறது. லண்டனில் உள்ள கென்னிங்க்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றது. அத்துடன் முதலில் பந்துவீசவும் தீர்மானித்துள்ளது. 

இங்கிலாந்து அணியுடன் விளையாடிய கடைசிப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் அம்லா காயம்பட்டதால், இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் மில்லர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் கடந்த போட்டியில் விளையாடிய ஆல்ரவுண்டர் டிவைன் ப்ரெடொரியஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அனுபவ வீரர் கிரிஸ் மோரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணியில் காயம் காரணமாக விளையாடமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட தொடக்க பேட்ஸ்மேன் தமிம், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்திடம் தோற்றுள்ளதால், இன்று வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com