‘நான் ஒரு ராசி இல்லாத ராஜா’ - தென் ஆப்பிரிக்க அணியின் சோக கதை

‘நான் ஒரு ராசி இல்லாத ராஜா’ - தென் ஆப்பிரிக்க அணியின் சோக கதை
‘நான் ஒரு ராசி இல்லாத ராஜா’ - தென் ஆப்பிரிக்க அணியின் சோக கதை
Published on

உலகக் கோப்பை தொடரில் பல அணிகள் தங்களின் பலத்தை நிரூப்பித்து வரும் நிலையில், பெரிய அளவில் ஏமாற்றம் அளிக்கும் அணியாக தென் ஆப்பிரிக்கா இருந்து வருகிறது. உலகக் கோப்பை தொடரில் 1992ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா முதன்முறையாக விளையாடியது. அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

அரை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் இந்த அணிக்கு வெற்றி இலக்கு மாற்றப்பட்டு, ஒரே பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டது. ஆகவே இந்த அணி அரை இறுதியில் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது. 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா காலிறுதி போட்டியில் தோல்வியை தழுவியது. 

இதனைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு தொடரில் அரை இறுதி போட்டிக்கு இந்த அணி தகுதி பெற்றது. அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து அந்த ஆண்டு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதால் இந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் உலகக் கோப்பையிலிருந்து சோகத்துடன் வெளியேறியது. இப்போட்டியில் தோற்றதற்கு தென் ஆப்பிரிக்காவின் லான்ஸ் குலுஸ்னர் மற்றும் ஆலன் டொனால்ட் செய்த தவறுதான் காரணம் எனப் பரவலக விமர்சனம் எழுந்தது.


 
அதன்பின்னர் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே மற்றும் கென்யா என மூன்று நாடுகளில் நடைபெற்றது. இதனால் அந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். எனினும் இந்தத் தொடரில் அந்த அணியின் சோகம் தொடரவே செய்தது. 

இம்முறை லீக் போட்டியிகளில் தோல்வியடைந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது தென் ஆப்பிரிக்கா அணி. அதேபோல 2011ஆம் ஆண்டும் தென்னாப்பிரிக்கா அணி எளிதாக வெற்றிப் பெற வேண்டிய கால் இறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி நான்காவது முறையாக அரை இறுதி போட்டியில் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது. 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பங்களாதேஷ் அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் இம்முறையும் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணி சொதப்பி வருவது கிரிக்கெட் ரசிகர்களை அதிக ஏமாற்றத்திற்குள் ஆழ்த்தியுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com