தீராத கோபத்தில் தென்னாப்பிரிக்க ரசிகர்கள்!

தீராத கோபத்தில் தென்னாப்பிரிக்க ரசிகர்கள்!
தீராத கோபத்தில் தென்னாப்பிரிக்க ரசிகர்கள்!
Published on

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்கள் மீளவில்லை என்பது நேற்றைய டெஸ்ட் தொடரின் போது தெரியவந்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங் கேற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், அடுத்த இரண்டு டெஸ்டுகளில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இந்த அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங் கியது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், டேவிட் வார்னர், பேன்கிராஃப்ட் ஆகியோ ருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு பதிலாக ஜோ பர்ன்ஸ், ரென்ஷா, ஹேன்ட்ஸ்கோம்ப் சேர்க்கப் பட்டனர். காய மடைந்த மிட்செல் ஸ்டார்க்குக்கு பதில் அறிமுக வீரர் சாட் சயர்ஸ் களமிறங்கினார்.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் 19 ரன்களில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க வீரர் மார்க்ராம் நிலைத்து நின்று அபார சதமடித்தார். அவர் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவ ருக்கு 4 வது டெஸ்ட் சதம்.

அம்லா 27 ரன்களிலும் கேப்டன்  டு பிளிசிஸ் ரன் ஏதுமின்றியும், டிவில்லியர்ஸ் 69 ரன்களிலும் ரபடா ரன் ஏதுமின்றியும் அவுட் ஆனார்கள். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் சேர்த்துள்ளது. பவுமாவும் 25 ரன்களுடன், டி காக் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், சாயர்ஸ் 2 விக்கெட்டும் லியான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் தென்னாப்பிரிக்க ரசிகர்கள் சிலர் அந்த கோபத்தில் இருந்து வெளிவரவில்லை. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்மித், வார்னர், பேன்கிராப்ட் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டதை அடுத்து அவர்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர்கள் பேசி வருகின்றனர். இந்திய வீரர் கள் அஸ்வின், ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோரும் அவர்களுக்கு ஆதரவாக நெகிழ்ச்சி ததும்பும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் கூட, ’ஸ்மித் நல்லவர்’ என்று கூறியிருந்தார். ஆனால், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிக ர்கள், ஆஸ்திரேலிய வீரர்களை மன்னிக்கத் தயாராகவில்லை. 

மணல் தாளை கொண்டு பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியதை நினைவுப்படுத்தும் விதமாக, 'Sandpaper special only R10!'  என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளை சிலர் ரசிகர்கள் தாங்கிப் பிடித்திருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com