சுதந்திர தின சிறப்பு லெஜெண்ட்ஸ் லீக்: இந்திய மகாராஜாஸ் அணிக்கு கேப்டனாகிறார் கங்குலி!

சுதந்திர தின சிறப்பு லெஜெண்ட்ஸ் லீக்: இந்திய மகாராஜாஸ் அணிக்கு கேப்டனாகிறார் கங்குலி!
சுதந்திர தின சிறப்பு லெஜெண்ட்ஸ் லீக்: இந்திய மகாராஜாஸ் அணிக்கு கேப்டனாகிறார் கங்குலி!
Published on

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடத்தப்படும் சிறப்பு லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில், இந்திய மகாராஜாஸ் அணிக்கு கேப்டனாக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தாண்டு நடைபெறவுள்ள லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு கொண்டாட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. மேலும் இந்த சீசனின் முதல் போட்டி செப்டம்பர் 16 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் “சிறப்புப் போட்டியாக” நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு போட்டியில் இந்திய மகாராஜாஸ் (India Maharajas) மற்றும் வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் (World Giants) ஆகிய இரு அணிகள் மோதவுள்ளன.

இந்திய மகாராஜாஸ் அணியில் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களும், வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியில் 10 வெளிநாடுகளை சேர்ந்த வீரர்களும் போட்டியிட உள்ளனர். இந்திய மகாராஜாஸ் அணிக்கு கேப்டனாக சவுரவ் கங்குலியும், வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இயான் மோர்கனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


செப்டம்பர் 17 முதல் வழக்கமான லீக் போட்டிகள் துவங்க உள்ளன. இந்த சீசனில் மொத்தம் 15 போட்டிகள் நடைபெறும். இதில் 4 அணிகள் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் ஃபிரான்சைஸ் வடிவத்தில் போட்டியிடும். 100+ வீரர்களைக் கொண்ட மொத்தக் குழுவில் உள்ள வீரர்களின் முழுமையான பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் கமிஷனர் ரவி சாஸ்திரி, “நாங்கள் சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை கொண்டாடுவது எங்களுக்கு பெருமையான தருணம். ஒரு பெருமைமிக்க இந்தியனாக, இந்த ஆண்டு லீக்கை சுதந்திரக் கொண்டாட்டத்தின் 75வது ஆண்டிற்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளோம். இதை பகிர்ந்து கொள்வது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. "

செப்டம்பர் 16ஆம் தேதி ஈடன் கார்டனில் நடைபெறும் சிறப்புப் போட்டிக்கான அணி:

இந்திய மஹாராஜாஸ்: சவுரவ் கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுப் பதான், சுப்ரமணியம் பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பின்னி, எஸ் ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), அசோக் திண்டா, பிரக்யான் ஓஜா , அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஜோகிந்தர் சர்மா மற்றும் ரீதிந்தர் சிங் சோதி.

வேர்ல்ட் ஜெயண்ட்ஸ்: இயோன் மோர்கன் (கேப்டன்), லென்டில் சிம்மன்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஜாக் காலிஸ், சனத் ஜெயசூரியா, மாட் ப்ரியர் (விக்கெட் கீப்பர்), நாதன் மெக்கல்லம், ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெய்ன், ஹாமில்டன் மசகட்சா, மஷ்ரப் மோர்டாசா, மஷ்ரப் மோர்டாசா, பிரட் லீ, கெவின் ஓ பிரையன் மற்றும் டெனேஷ் ராம்டின் (விக்கெட் கீப்பர்).

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com